சென்னையில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தும் 14 வயது அமெரிக்க சிறுமி சியோனா!
சென்னை: அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு பல்வேறு இடர்களை தாண்டி சென்னை வந்துள்ள 14 வயது சிறுமியை பரதநாட்டிய நிகழ்வு இன்று ராணி சீதை மஹாலில் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் நேபர்வில்லேவை சேர்ந்தவர் சியோனா ஆயக்காட். 14 வயதாகும் இந்த சிறுமிக்கு தமிழகத்தின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் என்றால் கொள்ளை பிரியம்.
இவர் சுமார் 9 ஆண்டுகளாக சிகாகோவில் பரத நாட்டியம் கற்று வருகிறார். இவருடைய குரு அமெரிக்க அதிபர் விருதை பெற்ற ஷோபா நடராஜன் ஆவார். இவரது நாட்டிய அரங்கேற்றம் சென்னை ராணி சீதை மஹாலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவில் பனிப்புயல், விமானங்கள் ரத்து, உடமைகளை மாயம் உள்ளிட்ட பல்வேறு இடர்களை துணிச்சலாக கடந்து வந்துள்ளார். இவர் முதலில் புஷ்பாஞ்சலி செய்தார். இது முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்குவதாகும்.
நாம் செய்யும் காரியத்தில் உள்ள இடர்களை கணபதி போக்குவார் என்பதால் முதலில் எப்போதும் விநாயகரை வணங்க வேண்டும். அடுத்ததாக திருப்புகழ் நடனமாடினார். இதன் பின்னர் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த வள்ளி கல்யாணத்தை அரங்கேற்றினார்.
பின்னர் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை நடனம் மூலம் சித்தரித்தார். அது போல் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்குவது உள்ளிட்டவைகளை நடித்து காட்டினார். பாடலின் பாவங்கள், ரசங்கள், லயங்கள், ராகங்களுக்கு சியோனா உயிர் கொடுத்தார். இதனால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
பரதநாட்டிய கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பரிட்சயமான சின்னஞ்சிறு கிளியே பாடலுக்கும் நடனமாடினார். நடனக் கடவுளான நடராஜருக்கு தில்லானா ராகம் மூலம் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் மங்கலம் நிகழ்த்தப்பட்டது. சியோனாவின் குருவான ஷோபா நடராஜன் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றி வெற்றி பெற செய்தார். இவரிடம் குச்சிப்புடி நடனத்தையும் சியோனா கற்று வருகிறார்.
தனது அரங்கேற்றத்தை இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடத்த வேண்டும் என கனவுடன் பயணித்த சியோனா அதை சாதித்தும் காட்டி விட்டார். இவரது நடனம் அமெரிக்கா முதல் இந்தியா இடையே ஒரு பாலமாக அமைந்துவிட்டது. உலகம் முழுவதும் தமிழகத்தின் பாரம்பரிய நடனத்தை பரப்பியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications