இந்த 10 மேட்டர் இந்தியாவை தவிர வேறு எங்கும் இல்லை.. வியந்து பார்க்கும் அமெரிக்க பெண்! சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் ஒருவர் இந்தியாவுக்கு மட்டும் உரித்தான 10 விஷயங்களைத் தொகுத்து லிஸ்ட் போட்டுள்ளார். இந்த 10 விஷயங்கள் இந்தியாவில் இருப்பதால் மட்டுமே தனக்குக் கிடைப்பதாகவும் அமெரிக்காவில் இவை எல்லாம் கிடைக்காது எனச் சொல்லி லிஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பட்டியல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியர்கள் எப்படிப் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்களோ.. அதேபோல கணிசமான அளவு வெளிநாட்டினும் இந்தியாவில் வந்து தங்கி இருக்கிறார்கள். அப்படி இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் ஒருவர், அமெரிக்காவில் இல்லாத அதேநேரம் இந்தியாவில் கிடைக்கும் 10 விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

American lady Lists 10 Surprising India Perks that lacks in USA From UPI to Street Monkeys

இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண்

அவரது இந்த லிஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் கிறிஸ்டன் ஃபிஷர் என்ற பெண்ணே இந்த லிஸ்ட்டை தொகுத்துப் போட்டுள்ளார்.

இந்த லிஸ்டில் இருக்கும் விஷயங்கள் அமெரிக்காவில் தனக்குக் கிடைக்காது.. அதேநேரம் இந்தியாவில் வசிப்பதால் இதெல்லாம் தனக்குக் கிடைப்பதாகச் சொல்லி அவர் பதிவிட்டுள்ளார். யுபிஐ மூலம் ஈஸியாக பணம் அனுப்புவது முதல் தேவையான பொருட்களை நிமிடங்களில் வீடுகளுக்கே டெலிவரி செய்வது வரை அவர் 10 முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

10 விஷயங்கள்

1. முதலில் அனைத்து பொருட்களுக்கும் இருக்கும் MRP ரேட்.. அமெரிக்காவில் MRP முறை இல்லை. அங்கு எந்தவொரு கடைக்காரரும் எந்தப் பொருளுக்கும் அவர்கள் விரும்பிய விலையை நிர்ணயிக்க முடியும்.

2. தாபாக்கள்: இந்திய சாலையோரங்களில் மலிவான மற்றும் வசதியான தாபாக்கள் (சிறிய சாலையோர உணவகங்கள்) ஏராளமாக உள்ளன. இவை அமெரிக்காவில் இல்லை.

3. ஜெட் ஸ்ப்ரேக்கள்: கழிவறைகளில் சுத்தம் செய்யத் தண்ணீரைப் பயன்படுத்த ஜெட் ஸ்ப்ரேக்கள் இருக்கும். இது சுகாதாரத்தை உறுதி செய்ய உதவும்.! ஆனால் அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

4. குரங்குகள்: இந்தியாவில் குரங்குகள் அடிக்கடி தெருக்களில் சுற்றித் திரியும். அமெரிக்காவில் குரங்குகளை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே பார்க்க முடியும்.

ரிக்‌ஷா மற்றும் ஆட்டோக்கள்

5. ரிக்‌ஷா மற்றும் ஆட்டோக்கள்: இந்தியாவில் இவை மலிவான மற்றும் வசதியான போக்குவரத்துச் சாதனங்களாக உள்ளன. அதேநேரம் அமெரிக்காவில் அனைவரும் தங்கள் சொந்த கார்களை பயன்படுத்துகின்றனர்.

6. பள்ளிச் சீருடைகள்: இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிவது கட்டாயம். ஆனால் அமெரிக்க பள்ளிகளில் சீருடை முறை இல்லை.

7. யுபிஐ முறை: இது இந்தியாவில் பணம் செலுத்த மிகவும் வசதியான மற்றும் எளிதான வழி. இந்தியாவில் எனக்கு மிக மிகப் பிடித்த ஒரு விஷயம் இதுதான்.

டெலிவரி

8. டெலிவரி சேவைகள்: இந்தியாவில் 8 நிமிடங்களுக்குள் எந்தவொரு பொருளையும் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் டெலிவரி செயலிகள் உள்ளன. இது அமெரிக்காவில் இல்லாத ஒரு வசதி.

9. மேகி: இந்தியக் கடைகளிலும் வீடுகளிலும் மேகி ஒரு முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் இவை அமெரிக்காவில் கிடைப்பதில்லை.

10. பஜார் மற்றும் சந்தைகள்: இந்தியாவில் பஜார்கள் மற்றும் சந்தைகளில் விரும்பிய பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதற்குச் சாத்தியமில்லை.

நெட்டிசன்கள்

அவரது இந்த இன்ஸ்டாகிராம் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் எந்தப் பொருளுக்கும் MRP இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல இன்ஸ்டண்ட் டெலிவரி மிகப் பெரியளவில் உதவும் என்றும் அது உலகெங்கும் கூட எடுத்துச் செல்லலாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+