"ராஜராஜ சோழன் இந்துவே இல்லை, சைவ மன்னர்!" டிகேஎஸ் இளங்கோவன் கருத்து! ஆர்எஸ்எஸ் பேரணி குறித்தும் பரபர
சென்னை: ராஜராஜ சோழன் தொடர்பான விவாதம் தொடரும் நிலையில், இது தொடர்பாக திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் ஒரு வழியாக இப்போது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிவிட்டது. இது திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என்று பெரும் பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடித்து உள்ளது.

பொன்னியின் செல்வன்
5 பாகங்களாக வெளியான நவாலை இரண்டு பாகங்களாக எடுத்து உள்ளனர். முதல் பாகம் இப்போது வெளியாகி உள்ள நிலையில், அடுத்த பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் தியேட்டரை தாண்டி, பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது. இதை அனைத்தையும் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.. நமது அடையாளம் பறிக்கப்படுவதாகவும் வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்வதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஆலோசனை
இது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. வெற்றிமாறனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டி.கே.எஸ் இளங்கோவன்
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழுவை நடத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சைவ மன்னர்
அப்போது பேசிய டி.கே.எஸ் இளங்கோவன் மாமன்னர் ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று விவாதம் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், ராஜராஜ சோழன் இந்துவே கிடையாது என்று கூறிய அவர், ராஜராஜ சோழன் ஒரு சைவ மன்னர் என்றும் இது வரலாறு படிக்கும் அனைவருக்கும் இது தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும்போது எங்கெல்லாம் கலவரம் நடைபெறுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். மேலும், கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக அக். 2ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்குத் தமிழக போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி
சில நாட்களில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் கனிமொழிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications