Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை இறுதி முடிவு எடுக்க உள்ளது விசிக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கலந்தாய்வுக் கூட்டம் நாளை (மார்ச் 23) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தொகுதிப் பங்கீட்டை ஏற்பது குறித்தும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

Amid Deadlock VCK to Decide on DMK Alliance Seat Deal on March 23

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை திமுக வலியுறுத்தி வருகிறது. கூடுதல் சீட் தராததால் தவாக வேல்முருகன், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். 2 தனித் தொகுதி, 2 பொதுத் தொகுதி என நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.

விசிக எதிர்பார்க்கும் சீட்கள்

திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, நாகை ஆளூர் ஷாநவாஸ், காட்டுமன்னார்கோவில் (தனி) சிந்தனைச் செல்வன், செய்யூர் (தனி) எம்.பாபு ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சீட் எதிர்பார்க்கிறார் திருமாவளவன். ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில் கூடுதல் கட்சிகளை மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதால் சீட் ஒதுக்கீடு நெருக்கடியாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். அதிகபட்சமாக கடந்த முறையைப் போலவே 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் விசிகவின் சொந்த சின்னமான பானை சின்னத்திலேயே நிற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

7 சீட்?

ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகள் உடன் மேலும் 4 தொகுதிகள் வேண்டும் என்று விசிக தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தலித்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுச் சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதால், கூடுதலாக பொது தொகுதிகளையும் பெற முயல்கிறார் திருமாவளவன்.

இதுவரை திமுகவுடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. விசிகவிற்கு அதிகபட்சம் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விசிக தரப்பில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

நாளை முக்கிய ஆலோசனை

இந்த இழுபறிக்கு இடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நாளை (மார்ச் 23) அவசர உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக வழங்க உத்தேசித்துள்ள சீட் எண்ணிக்கை குறித்து கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட உடனடி தேர்தல் பணிகள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைகள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+