Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலை மகள் நிச்சயதார்த்தம்.. மதியம் ஸ்டாலினுடன் பேச்சு.. திமுக கூட்டணிக்காக போராடும் செல்வப்பெருந்தகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் பனிப்போர் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளது. திமுக - காங்கிரஸ் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்று மாலை 4 மணியளவில் செல்வப்பெருந்தகை மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதற்கு நடுவே அவர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. இன்று இரவுக்குள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தீர்வு எட்டப்படும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது [Congress Alliance].

amid-dmk-congress-alliance-selvaperunthagai-daughter-engagement-will-be-happen-evening

திமுக - காங்கிரஸ் கூட்டணி

தவெகவுடன் இணைய வேண்டும் என சிலரும், திமுகவுடன் தொடர வேண்டும் என பலரும் காங்கிரஸ் கட்சியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் ப சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுகவுடன் கூட்டணி என்பதில் சோனியா காந்தி உறுதியாக உள்ளார். ஆனால் ராகுல் காந்தி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

செல்வப்பெருந்தகைக்கு அழுத்தம்

"36 தொகுதிகள் தான் கடைசி கோடு. அதில் இருந்து இறங்கி வர முடியாது" என்று ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளாராம். தொகுதியை குறைத்தால் ஒரு ராஜ்யசபாவுக்கு பதிலாக 2 ராஜ்சபா சீட்கள் வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கூறியுள்ளது. சென்னையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் அவரை சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர் பாலு, கனிமொழி ஆகியோரும் இருந்துள்ளனர். திமுக கெடு விதித்துள்ளதால் இன்று இரவுக்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. செல்வப்பெருந்தகை மகள் அக்சயா பிரியாவுக்கு இன்று மாலை 4 மணியளவில் ஈசிஆர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இருப்பினும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக கூட்டணி பஞ்சாயத்து அவரை படுத்தி எடுத்து கொண்டிருக்கிறது.

மகள் நிச்சயதார்த்தம்

செல்வப்பெருந்தகை திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார். ஆனால் டெல்லி காங்கிரஸ் மற்றும் இங்குள்ள சிலர் திமுக வேண்டாம் என்கின்றனர். இன்றைக்குள் முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் மகளின் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை கூட கவனிக்காமல் செல்வப்பெருந்தகை காலை 11.30 மணியளவில் சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவருடன் ஒரே காரில் ஸ்டாலினை சந்திக்க சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. பேச்சுவார்த்தை சற்று சுமூகமாக முடித்த திருப்தியில் தான் செல்வப்பெருந்தகை ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்பட்டார். நிச்சயதார்த்தத்திற்கு சில மணி நேரமே உள்ள நிலையில், திமுக கூட்டணிக்காக செல்வப்பெருந்தகை பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து திரிந்து போராடுவது காங்கிரஸ் கட்சியினரிடம் பேசு பொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+