கிளாம்பாக்கத்தை விடுங்க! இன்டர்நேஷனல் லெவலுக்கு மாறுது திரு.வி.க நகர் பேருந்து நிலையம்! இதை பாருங்க
சென்னை: சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே உள்ள பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பேருந்து நிலையம் இருந்தும் கூட அதை சரியாக அரசு பராமரிக்கவில்லை. அதிலும் கடந்த 10 வருடங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.

அரசு நேரடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே இதற்கு காரணம். அதே சமயம் இது போன்ற பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கேள்வி கேட்கும் பட்சத்தில், தனியார் அமைப்புகள் இதை சிறப்பாக செய்யும்.
சில வெளிநாடுகளில் இது போல தனியார் அமைப்புகளே ஒப்பந்தம் எடுத்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
பேருந்து நிலையம்: கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போனது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இங்கே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் பணிகள் முடிய உள்ளன.
திருவிக நகர் பூங்கா: சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படவுள்ள திரு.வி.க. நகர் பேருந்து நிலையப் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, , இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர் பாபு, , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்பி கலாநிதி, ஆர். கிரிராஜன், துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர். ப. ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா ஆகியோர் இந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?: திரு.வி.க. நகர் பேருந்து நிலைய பணியில் செய்யப்படும் மாற்றங்களில் பின்வரும் மாற்றங்கள் அதிகம் கவனம் பெறும்.
பேருந்தின் முகப்பு தோற்றம் மொத்தமாக மாற்றப்படும்.
பேருந்து நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
பேருந்து நிலையத்தில் இருக்கைகள் நவீனம் ஆக்கப்படும்.
உள்ளே இருக்கும் போர்டுகள் டிஜிட்டல் வகைகள் மாற்றப்படும்.
விளக்குகள் தொடங்கி திரைகள் வரை எல்லாம் நவீனம் ஆக்கப்படும்.
விமான நிலைய ஸ்டைலில் நுழையவோ மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்படும்.
அதேபோல் உள்ளே லிப்டில் செல்லும் விதமாக அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படும்.
மேழும் புதிய உணவகங்கள், கடைகள் அமைக்கும் விதமாக உள்ளே புதிய காம்பிளக்ஸ் அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications