மன்சூர் - த்ரிஷா பிரச்சனையை விடுங்க.. ரஜினிகாந்த் தமன்னா பற்றி என்ன சொன்னார் தெரியுமா? பரவும் வீடியோ
சென்னை: நடிகர் த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி இருக்கும் நிலையில், நடிகை தமன்னா பற்றி ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை த்ரிஷா, "இவர் போன்ற ஆட்களால் மனித குலத்திற்கே அவப்பெயர். இவருடன் சேர்ந்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்." என தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும் என பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "அய்யா பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன்.
அனுமாரு சஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிகிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள்.
பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN னுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சினை இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அடேய் இந்த சங்கீ ரொம்ப பாலிஷா அதே அசிங்கத்தை 72 வயசுல பேசுறது அருவருப்பா இல்லை... 🤮🤮🤮🤮🤮🤮@rajinikanth pic.twitter.com/k84IGgHkgA
— தமிழ்செல்வன் (@tamilselvanDC) November 19, 2023
மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் தமன்னா பற்றி பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "எனக்கு சூட்டி இருக்கு என்று சொன்னார்கள். மதியத்துக்கு பிறகு வந்தால் போதும் என்றார்கள். மதியத்துக்கு பிறகு சார் நீங்க சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் என்றார்கள். 5 மணியாகிவிட்டது. ஒரு மணி நேரத்தில் இடைவேளை வந்துவிடும். அதன் பிறகு மேக் அப் போடுங்கள் என்றார்கள். 7.30 மணிக்கு அழைத்தார்கள். உள்ளே சென்றவுடன் ஜே ஜே என்று இருந்தது. ஜானி மாஸ்டர் ஒரே பாடல் என்று பில்டப் கொடுத்து இருந்தார். நானும் ரிகர்சல் செய்துவிட்டு வந்தேன். உள்ளே அழைத்து ஒரே ஒரு மூவ்மெண்ட். தமன்னாவுடன் சரியா நான் பேசக்கூட இல்லை." என்றார். இதனை குறிப்பிட்டு மன்சூர் அலிகான் பேச்சுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
-
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications