அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. பூஸ்டர் டோஸ்களில் மத்திய அரசின் முடிவு தான் என்ன? மருத்துவர்கள் தவிப்பு
சென்னை: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு விரைவில் பூஸ்டர் டோஸ் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Recommended Video
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. இறுதியில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றியது.
இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவால் உலகில் அடுத்த அலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.

பூஸ்டர் டோஸ்
இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் பணிகளை உலகின் பல்வேறு நாடுகளும் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியத்திற்கான தலைவரும் பூஸ்டர் டோஸ் மட்டுமே ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் எனச் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 410க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூஸ்டர் டோஸ் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு
இருப்பினும், பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு இதுவரை எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை. முதலில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 2 டோஸ் வேக்சின் போட வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, குறைந்தது இன்னும் சில வாரங்களுக்கு பூஸ்டர் டோஸ் பணிகளை இந்தியா தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. அதேநேரம் நேரடியாக நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளதால் சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ரகசியமாக பூஸ்டர் டோஸ்
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் பூஸ்டர் டோஸ்களை ரகசியமாக எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சில மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வேக்சின்களை பூஸ்டர் டோஸ்களாக எடுத்துக்கொள்வதாக ESI மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் வேக்சின் குப்பியில் வேஸ்டேஜ்களை கணக்கில் கொண்டு கூடுதலாக அளிக்கப்படும் வேக்சின்களை பயன்படுத்துகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

ஏன்
அதாவது மத்திய அரசின் விதிகளுக்கு ஏற்பவே கோவின் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 டோஸ்களை தாண்டி மூன்றாவது டோஸ் எதுவும் கோவின் தளத்தில் பதிவு செய்து போட முடியாது. எனவே, வேஸ்டேஜை கருத்தில் கொண்டு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகளை வேறுவழியின்றி மருத்துவர்கள் போட்டுக் கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார இயக்குநர்
அதேநேரம் அரசு அறிவிப்பு இல்லாமல் பூஸ்டர் டோஸ் போடுவது மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மத்திய அரசு இப்போது இரண்டு டோஸ்களை மட்டுமே போட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. எனவே, கூடுதல் டோஸை எடுத்துக் கொள்வது மத்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாகும். எனவே, அப்படி யாரும் செய்யக் கூடாது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்க வேண்டும்" என்றார்.

மருத்துவர்கள் தரப்பு
இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் அரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்கின்றனர். 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்ட பிறகும் கூட ஆன்டிபாடி அளவு தொடர்ந்து குறைந்து வருவதாலேயே பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்வது அவசியம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஓமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சரியான நேரத்தில் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அது தங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை
இதனால் கொரோனா பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு வெளிநாடுகளிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதையும் அவர்கள் மேற்கோள்காட்டுகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அனைவருக்கும் 3ஆவது டோஸ் வேக்சின் பணிகள் கூட முடியவுள்ளது. அங்கு 4ஆவது டோஸ் போடுவது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications