Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருபக்கம் பரந்தூர் எதிர்ப்பு! இன்னொரு பக்கம் சொந்த பிரைவேட் ஜெட்டில் மதுரை போன விஜய்! கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு பல்வேறு வல்லுனர்கள் குழு தொடங்கி அரசின் பல பிரிவுகள் வரை அறிவியல்பூர்வமான அனுமதி வழங்கி உள்ள நிலையில் நடிகர் விஜயும் அவரின் தமிழக வெற்றிக் கழகமும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் தனி விமானம் கவனம்பெற்றுள்ளது . அவர் மதுரையில் நாளை நடக்க உள்ள மாநாட்டிற்கு இன்று பிரைவேட் ஜெட்டில் மதுரை வந்தார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

paranthur airport

மாநாட்டு மேடையானது 200 அடி நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் 800 அடி நீளத்திற்கு நடைபாதை வசதியும் செய்யப்படுகிறது. இம்மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர்களின் வசதிக்காக 30 இடங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், 200 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் எளிதாக உள்ளே வந்து செல்ல சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக மாநாடு - விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக நடத்தப்படும் மாநில மாநாட்டில் முக்கியமான சில அரசியல் தலைகளை, மாற்று கட்சியினரை மேடை ஏற்றலாமா அல்லது வேறு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாமா என்று விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். அவரின் பிரைவேட் விமானத்தின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதன் செலவுகள் தொடர்பான விவரங்கள் கவனம் பெற்று உள்ளன.

விஜய் எந்த ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார்?

நடிகர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வந்ததில்லை என்றாலும், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல அறிக்கைகள் விஜய் ஹாக்கர் 800XP என்ற நடுத்தர ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறுகின்றன. இந்த விமானம் பெரும்பாலும் அவர் திரைப்பட படப்பிடிப்புகள், அரசியல் பயணங்கள் மற்றும் இந்தியாவிற்குள் மேற்கொள்ளும் பயணங்களின்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும்.

விஜய்யின் தனி விமானத்தின் விலை என்ன?

ஹாக்கர் 800XP விமானத்தின் விலை சுமார் ₹80-100 கோடி (தோராயமாக $10-12 மில்லியன்). ஆனால் இதே விலை விமானத்தின் உட்புற அலங்காரங்கள், விமான மின்னணுவியல் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பை பொறுத்து மாறுபடும். இந்தியாவில், இறக்குமதி வரிகள் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் காரணமாக செலவு மேலும் அதிகரிக்கிறது. இதனால் இவரின் விமானம் 150 கோடி ரூபாய் வரை இருக்கலாம். அதோடு வருடத்திற்கு இதன் பராமரிப்பு , விமானி, பணிப்பெண், ஹேங்கர் கட்டணம் என்று இவர் 10-15 கோடி செலுத்த செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதுவும் குறைந்தபட்ச தொகைதான்.

விஜய் ஆரம்பத்தில் குத்தகை மாதிரியின் மூலம் விமானத்தைப் பெற்றதாகவும், பின்னர் அதை முழுவதுமாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகபட்சம் 10-15 கோடிகளை அவர் சேமித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஹாக்கர் 800XP பற்றிய விவரங்கள்

உற்பத்தியாளர்: ஹாக்கர் பீச்ச்கிராஃப்ட்
தொலைவு: ~4,500 கி.மீ (சென்னை டூ துபாய் வரை இடைநில்லாமல் பறக்கலாம்)
அதிகபட்ச வேகம்: 830 கி.மீ/மணி
உட்காரும் திறன்: 8-13 பயணிகள்

உள்ளே இருக்கும் வசதிகள்: சொகுசு சாய்வு நாற்காலிகள், கான்ஃபரன்ஸ் டேபிள், பொழுதுபோக்கு அமைப்பு, மினி பார், செயற்கைக்கோள் தொலைபேசி
பணியாளர்கள்: 2 விமானிகள் + 1 பணிப்பெண் (கட்டாயம்)

ஹாக்கர் 800XP விமானத்தின் கேபின் நடுத்தர அளவிலான ஜெட் விமானத்திற்கு ஏற்ற விசாலமான மற்றும் வசதியான கேபின் ஆகும் .

விஜய் எப்போது, ஏன் இதைப் பயன்படுத்துகிறார்?

விஜய் அடிக்கடி கேரளா, ஹைதராபாத் மற்றும் துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணம் செய்கிறார். அப்போதெல்லாம் இதை பயன்படுத்துவார். அரசியல் கூட்டங்களுக்கு செல்லும் போதும் இதை பயன்படுத்துவார். தனிப்பட்ட ஆன்மீக பயணங்களின்போதும் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.

விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களைப் போலவே, அவர் தனி விமானத்தைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அதை பற்றி தொடர்ந்து ரகசியம் காத்து இருக்கிறார். ஆனால் பல திரைப்படத் துறை சார்ந்தவர்கள் அவர் பல நிகழ்வுகளுக்காக அந்த தனி விமானத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+