இரண்டாக பிரியும் பாமக.. டெல்லிக்கு சென்ற அன்புமணி.. அமித் ஷா, ஜேபி நட்டாவுடன் சந்திப்பு?
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நிலவி வரும் சூழலில், திடீரென அன்புமணி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்தார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, தாய் மீது பாட்டில் வீசியது, செளமியாவை அரசியலுக்கு கொண்டு வந்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தார்.

ராமதாஸ் vs அன்புமணி
அதேபோல் அன்புமணியிடம் தலைவருக்கான பண்பே இல்லாததால், கடைசி மூச்சு இருக்கும் வரை தாமே தலைவர் பதவியை வைத்து கொள்ள உள்ளதாக ராமதாஸ் கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ராமதாஸ் பேசும் அத்தனையும் பொய்கள் தான். அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு குழந்தையை போல் மாறிவிட்டார்.
முழு அதிகாரம் யாருக்கு?
பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான். பாமக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் பயிர் எது? களை எது? என்று இப்போதுதான் தெரிகிறது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
2ஆக பிரியும் பாமக
பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ அருள் கடுமையாக அன்புமணியை விமர்சித்துள்ளார். இதனால் பாமக இரண்டாக பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது.
டெல்லியில் அன்புமணி
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணிடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி சென்றுள்ள அன்புமணி, தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அன்புமணி பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications