ராஷ்மிகா மட்டுமில்ல, யாரையாவது மார்பிங் செய்தால் கண்டுபிடிப்பது எப்படி? கூகுளில் இருக்கு ஒரு ஈஸி வழி
சென்னை: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோல் மார்பிங் செய்தால் கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம்.
பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான இன்ஸ்டிராகிராம் பிரபலம் ஜாரா பட்டேலின் வீடியோவை எடுத்து பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பிங் செய்து டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் கண்டன பதிவை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார். அதனை அவரது தந்தையும் நடிகருமான அமிதாப் பச்சனும் ரீட்வீட் செய்து இருந்தார்.

மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்திய ஐடி விதிகளை பின்பற்றாத சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலது முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பதிவிடுவது அதிகரித்து வருகிறது.
உண்மைபோல் தெரிந்தாலும், இவை போலி வீடியோக்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். குறிப்பாக கண்களை சிமிட்டுவதில் வித்தியாசம் தெரியும். அதேபோல் நிறத்திலும் மாற்றம் தெரியும். முகம் ஒரு நிறமாகவும், உடல் வேறு நிறமாகவும் இருக்கும். அதேபோல் முகத்திற்கு அருகே வெளிச்சத்திலும் வித்தியாசம் தென்படும். மேலும் காட்சியில் உள்ள உதட்டு அசைவும், ஆடியோவும் நான் சிங்கில் இருக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக பாவனைகளை அவ்வளவு தத்ரூபமாக காட்டாது. செயற்கைத்தனம் தெரிந்துவிடும். முகம் பொம்மை போன்றும், பில்டர் போட்டது போலவும் இருக்கும்.
அதேபோல், வீடியோவுக்கு இடையே தடங்கள், நிற மாறுதல்கள் இருந்தாலும் அவை டீப் ஃபேக்காக இருக்கலாம். இயற்கையான உடல் அமைப்பு, உடல் வாகை இந்த தொழில்நுட்பம் தத்ரூபமாக காட்டாது. உடல் அசைவுகள், உடல் அமைப்புகள் போன்றவை இயற்கைக்கு மாறாக இருக்கும். இதெல்லாம் நாம் வெறும் கண்களால் கண்டுபிடிக்கும் விசயங்கள். இவை அல்லாமல் தொழில்நுட்ப உதவியுடனும் கண்டறியலாம். இதற்காகவே கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தொழில்நுட்பத்தை வைத்து உள்ளது.
வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் அறியலாம். google.com/ என்ற இணைய முகவரிக்கு சென்றால், அதில் டைப் செய்யும் இடத்தில் கேமரா ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்து, நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்த படத்தை பதிவேற்றம் செய்தால், உண்மையான வீடியோ எது? அதில் இருப்பது யார் என்று அறியலாம். ஆனால், அது பிரபலமாக இருந்தால் மட்டுமே கண்டுபிடிப்பது சுலபம். ராஷ்மிகா விவகாரத்தில், அந்த உண்மையான வீடியோவில் இருந்த ஜாரா பட்டேல் என்ற பெண் பிரபலமானவர் என்பதால் கூகுள் உண்மையான வீடியோவை காட்டிவிட்டது. பிரபலம் இல்லாதவரின் ஆபாச வீடியோவில் உள்ள முகத்தை மாற்றினால் கண்டுபிடிப்பது கடினம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications