வார்னிங்.! எங்கும் வேக்சின் இல்லை.. பல இடங்களில் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்.. மோசமான விளைவு ஏற்படும்
சென்னை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வேக்சின் பணிகள் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்து கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி தடுப்பூசி பணிகளை விரைந்து மேற்கொள்ளப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், நாட்டில் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசிக்குப் பல மாநிலங்களிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.

வேக்சின் தட்டுப்பாடு
இதனால் வேக்சின் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்நாடும் விதிவிலக்கு இல்லை. இங்கும் பல மாவட்டங்களில் வேக்சின் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தேவையான வேக்சின்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகக் கடந்த வாரமே சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

Array
இந்நிலையில், பற்றாக்குறை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் வேக்சின் பணிகள் இன்று நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட மையங்களில் பற்றாக்குறையால் வேக்சின் பணிகள் நடைபெறவில்லை. அதேபோல கோவை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளிலும் இன்று வேக்சின் பணிகள் நடைபெறவில்லை.

Array
இந்நிலையில், பற்றாக்குறை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் வேக்சின் பணிகள் இன்று நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட மையங்களில் பற்றாக்குறையால் வேக்சின் பணிகள் நடைபெறவில்லை. அதேபோல கோவை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளிலும் இன்று வேக்சின் பணிகள் நடைபெறவில்லை.

வேக்சின் தட்டுப்பாடு
தமிழ்நாட்டில் தடுப்பூசி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் தான் அதிகாலையில் இருந்தே பல்வேறு தடுப்பூசி முகாம்களில் வேக்சின் போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் நிற்கின்றனர். தமிழ்நாடே ஆர்வமாக இருக்கும் நிலையிலும், தட்டுப்பாடு காரணமாக விரும்பும் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் டோஸ்
இந்தியாவில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து வேக்சின்களும் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்களுக்குச் சரியான நேரத்தில் வேக்சின் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது வேக்சின் போடும் நோக்கத்தையே சீரழித்து விடுகிறது. கடந்த வாரம் சென்னையில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் இரண்டாம் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு வேக்சின் முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா குறித்து அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாஃப்னர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதால், அவர்களின் உடல்களிலேயே உருமாறிய கொரோனா தோன்ற அதிகம் வாய்ப்புள்ளது என்றும் சில வகை உருமாறிய வைரஸ்கள், டெல்டா கொரோனா வகையைப் போல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வில்லியம் ஷாஃப்னர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications