சென்னை வந்தார் அமித்ஷா! ஆளுநர் மாளிகையில் “ரெஸ்ட்”.. பாஜக மீட்டிங் - தமிழகத்தை வட்டமிடும் தாமரைகள்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார்.
இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

அமித்ஷா வருகை
நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் மீண்டும் மதுரையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தந்து இருக்கிறார். நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.

ஆளுநர் மாளிகை
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமித்ஷா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கி உள்ளார். இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

பாஜகவினருடன் ஆலோசனை
அதன் பின்னர் மாலை 3 மணியளவில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்துக்கு அமித்ஷா செல்கிறார். கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் அமித்ஷா, மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

ஆபரேஷன் சவுத்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா முன்வைத்தார்.

மோடி வருகை
அதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வரும் அக்கட்சி, பல்வேறு நடைமுறை செயல்பாடுகளை மாற்றியும் இருக்கிறது. தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாட்டிற்கு குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வந்து சென்று இருக்கிறார்.

ஜேபி நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் அண்மையில் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்தார். இதேபோல் கேரளா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு வரும் அமித்ஷா கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications