இரவு 11 மணிக்கு மீட்டிங்.. 3 மணி நேரம் நீண்ட தீவிர ஆலோசனை..குருமூர்த்தியிடம் என்ன பேசினார் அமித் ஷா?
சென்னை: நேற்று தமிழகம் வந்து இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆடிட்டர் குருமூர்த்தியுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார். தேர்தல் வியூகங்களை வகுக்கவும், கூட்டணியை உறுதி செய்யவும், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் அமித் ஷா தமிழகம் வந்தார்.
நேற்று அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அமித் ஷா, அதிமுகவுடனான சட்டசபை தேர்தல் கூட்டணியை உறுதி செய்தார்.

பாஜக மீட்டிங்
இதன் பின் பாஜக தலைவர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை செய்தார். நேற்று மாலைக்கு பின் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, எச். ராஜா உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர்.

முக்கிய மீட்டிங்
தமிழகத்தில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இதில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைக்கு பின் நேற்று 11 மணிக்கு பிறகு அமித் ஷா தான் இருந்த தனியார் ஹோட்டலில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழக பாஜக குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆலோசனை
அதோடு நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அமித் ஷா கேட்டறிந்தார் என்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை, உடல்நிலை காரணமாக சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில்தான் இந்த மீட்டிங்கில் ரஜினிகாந்த் குறித்து குருமூர்த்தியிடம் அமித் ஷா விவரங்களை கேட்டுள்ளார்.

முக்கியம்
இன்னும் சில முக்கிய தலைவர்கள் குறித்தும் இந்த மீட்டிங்கில் பேசி உள்ளனர். மொத்தம் 3 மணி நேரம் இந்த குருமூர்த்தி - அமித் ஷா மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கிற்கு பின் தமிழக பாஜக முக்கியமான சில பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவிற்கு முக்கியமான சில டாஸ்குகளை பிக்பாஸ் அமித் ஷா கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications