Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போ இதான் முக்கியமா? அமித் ஷா கேட்ட கேள்வி! நேபாளத்தால் அதிமுகவிற்கு வந்த சிக்கல்.. புதுசா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாளம் விவகாரம் காரணமாக அதிமுக உட்கட்சி மோதல் - பாஜக கூட்டணி மோதலில் இப்போதைக்கு உள்துறை அமித் ஷா கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nepal Edappadi Palaniswami

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் ஈபிஎஸ். இந்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

எடப்பாடிக்கு வந்த மெசேஜ்

இந்த நிலையில்தான் செங்கோட்டையனை அமித் ஷா சந்தித்தது உண்மைதான் என்ற மெசேஜ் எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்துள்ளதாம். அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த காலக்கெடு இன்னும் 3 நாட்களில் முடிய உள்ளதால் அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார்.

பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும், என்று பேசி இருந்தார்.

அமித் ஷா எடப்பாடி

இந்த நிலையில்தான் அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு தகவலாக சென்றுள்ளது. அதை தொடர்ந்து செங்கோட்டையன் விவகாரத்தில் அமித் ஷா தலையிட வேண்டும், அவருக்கு ஆதரவாக சில பாஜக தலைகள் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தூது அனுப்பி உள்ளதாம். அதாவது இந்த பிரச்சனை தொடர்பாக செங்கோட்டையன் தரப்பும் அமித் ஷாவை அணுகி உள்ளது. எடப்பாடி தரப்பும் அமித் ஷாவை அணுகி உள்ளது.

நேபாளம் - அமித் ஷா

ஆனால் நேபாளம் விவகாரம் காரணமாக அதிமுக உட்கட்சி மோதல் - பாஜக கூட்டணி மோதலில் இப்போதைக்கு உள்துறை அமித் ஷா கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. ஆட்சி கவிழ்ந்துவிட்டது. நேபாளம் இந்தியாவிற்கு மிக முக்கியம். இதை உள்துறை அமைச்சராக அமித் ஷா கவனிக்க வேண்டும்.

அதோடு இதை பயன்படுத்தி சீனா, அமெரிக்கா நேபாளம் உள்ளே நுழைவதை இந்தியா அனுமதிக்க முடியாது. அதோடு அண்டை நாட்டில் பிரளயம் வெடித்தால் அதன் விளைவுகள் இங்கேயும் பரவும் அபாயம் உள்ளது.

அதோடு மக்கள் சிலர் இங்கே ஊடுருவும் அபாயமும் உள்ளது. இதனால் உள்துறை அமைச்சராக அமித் ஷா இதை கவனிக்க வேண்டும் என்பதால் மற்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வில்லையாம். முக்கியமாக அதிமுக விவகாரத்தில்.. இப்போது இது முக்கியம் இல்லை.. டைம் இருக்கு என்று அமித் ஷா ஒதுக்கி வைத்து உள்ளாராம். இப்போதைக்கு பேச வேண்டாம்.. பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று அமித் ஷா முடிவெடுத்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+