சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை.. முருகன், சிடி ரவி, குஷ்பு, நமீதா பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சரும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைப்பதற்காக இன்று மதியம் சென்னை வந்தார் அமித் ஷா. பிறகு, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார் அவர்.

Amit Shah meets with Tamil Nadu BJP leaders in Chennai

பின்னர், தான் தங்கி உள்ள லீலா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்து தமிழகம் சார்ந்த கோரிக்கை மனுவை வழங்கி விட்டுச் சென்றனர். இதற்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கைஅமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கை

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் மேலும், குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது? தேர்தல் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

English summary
Union Home minister Amit Shah, was met BJP leaders in Tamilnadu and had discussed with them over election and political situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X