2026.. அமித்ஷா போட்டு கொடுத்த ஸ்கெட்ச்! அச்சுப்பிசகாமல் முடித்த அண்ணாமலை! ஓபிஎஸ், டிடிவி ரீ-என்ட்ரி!
சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் அமித்சாவின் கவனம் முழுக்க முழுக்க தமிழகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. தமிழகத்தில் பலவீனமாக உள்ள என்டிஏ கூட்டணியை பலப்படுத்த அண்ணாமலையை அமித்ஷா களமிறக்கிய நிலையில் அதனை செய்து முடித்திருக்கிறார்.
எடப்பாடிக்கு எதிராக நின்ற ஓபிஎஸ் டிடிவி தினகரனை மீண்டும் என்டிஏவுக்கு வர சம்மதிக்க வைத்திருக்கிறார் அண்ணாமலை. இதை தெரிவிப்பதற்காகவே அவர் டெல்லி சென்றதாக கூறுகின்றனர் பாஜகவினர்.
2026ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைமை தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தமிழகத்தை கருத்தில் கொண்டு விரிவான அரசியல் திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 தேர்தல் கணக்கு
தமிழகத்தை பொறுத்தவரை 2018 முதல் திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் 2026 தேர்தலையும் இக்கூட்டணியுடன் சந்திக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தொகுதி பங்கீடு தொடர்பாக குழுவை அமைத்து, முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி
இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாஜக ஏற்கனவே அதிமுகவுடன் இணைந்த நிலையில், பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளையும் மீண்டும் சேர்க்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இதனால் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி சிதறுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது.
அண்ணாமலை நடவடிக்கை
இந்த சூழ்நிலையில் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் டிடிவியை அணுகி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து அண்ணாமலையும் டெல்லியில் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். பீகார் தேர்தல் முடிந்ததும் அமித்ஷாவின் கவனம் முழுவதும் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி
2026 தேர்தலில் திமுகவை எதிர்கொள்ளும் போது அதிமுக-பாஜக கூட்டணி அதிகபட்சம் 170 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் எண்ணம். ஆனால், அதற்கு அதிமுக வாக்குகள் சிதறாமல் இருக்க, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு அமித்ஷாவால் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்காக அண்ணாமலையிடமே நேரடி பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் டிடிவி ரீஎன்ட்ரி
இதன் ஒரு பகுதியாக, அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியிருந்தார். நேற்று முன் தினம் கோவை சென்ற அவர், டிடிவி தினகரனை தனது இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கூட்டணிக்கு மீண்டும் சேர்வது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை உடனுக்குடன் டெல்லி புறப்பட்டு, இன்று பாஜக தேசிய தலைமைக்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி முன்வைத்த கோரிக்கைகளை விளக்கி, இறுதி முடிவை எடுப்பது பற்றி ஆலோசிக்க உள்ளார்.
அண்ணாமலை டெல்லி பயணம்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓபிஎஸ் மற்றும் டிடிவியை கூட்டணியில் சேர்க்கும் விஷயம் தொடர்பாக தேசிய தலைமை முடிவு செய்யும்," என்று தெரிவித்தார். ஆனால், மொத்தத்தில், அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் அண்ணாமலை தான் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும், இதற்காக தான் அவர் அடிக்கடி டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications