அமித்ஷா டெல்லியில் ஃப்ளைட் ஏறினாலே திமுகவினருக்கு பயம்! மதுரை ராசி இல்லை.. நயினார் நாகேந்திரன் பஞ்ச்
மதுரை: அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது எனவும், மதுரை மண் திமுகவினருக்கு ராசி இல்லாதது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், திமுக அரசுக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பாஜகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது என்றால் அதை சுட்டிக்காட்டுகின்ற கட்சியாக அதை தடுத்து நிறுத்தக்கூடிய கட்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அதிமுகவும் பாஜகவும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. காரணம் திமுக தலைவர் ஓரணியில் தமிழகம் என வீடு வீடாக செல்கின்றனர். தோல்வி பயம் காரணமாக ரோட் ஷோ நடத்துகின்றனர்
அமித்ஷா அவர்களே பார்த்தாலே திமுகவினர் பயப்படுகின்றனர்.
தமிழகத்துக்கு வருவதற்கு டெல்லியில் இருந்து விமானம் ஏறுகின்றார் என்று செய்தி கேட்டால் திமுகவினர் பயப்படுகின்றனர். தமிழக முதல்வருக்கு வேறு பணி இல்லை. காவல் நிலையத்தில் லாக்கப் டெத். ஒர் அணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விஷ சாராயம் அருந்தி இருந்தால் 10 லட்சம் ரூபாய். வேங்கை வயல் பிரச்சனை குறித்து திருமாவளவன் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் இடது கம்யூனிஸ்ட் அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள். காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை.
2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும். மதுரை எப்போதுமே பாஜகவினருக்கு ராசியான நகரம். மதுரையில் தான் அமித்ஷா அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது. முருக பக்தர்கள் மாநாட்டில் பல லட்சம் பக்தர்களும் பொதுமக்களும் பங்கு பெற்றனர். அமர்ந்திருந்த நாற்காலியை கூட ஒழுங்குப்படுத்தி சென்றவர்கள் தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கு பெற்றவர்கள்.
வேறு கட்சி கூட்டமாக இருந்தால் டாஸ்மார்க் தான் சென்று இருப்பார்கள். ஆனால் முருக பக்தர் மாநாட்டிற்கு வந்த பல லட்சம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள் எவ்வாறு சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சிறப்பான முறையில் வந்து சென்றார்கள். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற கூடிய ஊழலை தட்டிக் கேட்கும் வகையில் தான் இன்று பாஜக சார்பில் இந்த மதுரை மண்ணில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை திமுகவிற்கு ராசி இல்லாத ஒரு இடம். இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை.
மீனாட்சி அம்மையின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் மலரும். வீடுகளுக்கு உரிய வரி விதிப்பில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். மதுரை மட்டுமல்ல சிவகங்கை மாவட்டத்திலும் திமுகவினர் இன்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த தொழிலதிபரிடம் ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது" என்றார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?












Click it and Unblock the Notifications