அதிமுகவுக்கு அடுத்த அடி.. விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட திருச்சி கிழக்கு வேட்பாளர் ராஜசேகரன் விலகல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக ராஜசேகரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திருச்சி மாநகர பொருளாராகவும் இருந்த ராஜசேகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ராஜசேகரன் தவெகவில் இணைகிறாரா? இல்லை வேறு முடிவு எடுத்து இருக்கிறாரா என்று கூறவில்லை.

சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வென்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜும் , அதிமுக சார்பில் ராஜசேகரனும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

AIADMK candidate Rajasekaran who contested against Vijay in Trichy East quits the party

திருச்சி மாநகர பொருளாராகவும் இருந்த ராஜசேகரன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் ராஜசேகரன் கூறியுள்ளார். விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தார். சமீப நாட்களாக அதிமுகவில் இருந்து பலரும் விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில் ராஜசேகரனும் அதிமுகவில் இருந்து விலகியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தவெகவில் ராஜசேகரன் இணைகிறாரா? இல்லை வேறு முடிவு எடுத்து இருக்கிறாரா என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+