2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா?
சென்னை: "2026 தேர்தல் கைகூடவில்லை என்றால் என்ன? 2031 இருக்கிறது" என்ற மனநிலையில்தான் தற்போது தமிழகத்தில் பாஜக தனது அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவித்ததாக கூறப்படும் சில கருத்துகள், தமிழக பாஜக தலைவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்..
தமிழகத்தில் திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் பாஜக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் வளர்ச்சி கிடைக்கவில்லை.

2026 தேர்தல் பாஜக படுதோல்வியை சந்தித்தது. மோடி - அமித் ஷாவின் வியூகங்களும் கைகொடுக்கவில்லை.
அதனால்தான் உடனடி வெற்றியை விட நீண்டகால அரசியல் திட்டத்துடன் முன்னேற வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளதாம். அதற்கு முக்கிய காரணமாக மேற்கு வங்கத்தை காட்டியுள்ளார் அமித் ஷா.
பாஜக
ஒரு காலத்தில் அந்த மாநிலத்தில் பாஜக கணக்கில் கொள்ளப்படும் கட்சியாக கூட இல்லை. ஆனால் படிப்படியாக வளர்ந்து இன்று முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சி வளர்ச்சி அடைந்தது தேசிய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அதேபோல் அசாமிலும் பாஜக உருவாக்கிய அரசியல் மாற்றத்தை அமித் ஷா நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
அமித் ஷா
பல ஆண்டுகளாக அசாமில் வேறு சில கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய மாநிலத்தில் தற்போது பாஜக வலுவான ஆட்சியை அமைத்துள்ளது. கேரளாவிலும் முன்பு இல்லாத அளவுக்கு கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. "இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்திலும் அதேபோன்ற வளர்ச்சியை உருவாக்க முடியும்" என்ற நம்பிக்கையை அமித் ஷா வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியல்
தமிழகத்தை பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தல் பல கட்சிகளின் கணிப்புகளையே மாற்றியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்டை உருவாக்கியது. இளைஞர் வாக்காளர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் பல கட்சிகள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த சூழலை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
புதிய நிர்வாகிகள்
ஆனால் அதனால் கட்சி மனம் தளரவில்லை என்றும், மாறாக அடுத்த ஐந்து ஆண்டுகளை முழுமையாக கட்சிப் பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை உருவாக்குவது, கிராமப்புறங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவை பெருக்குவது போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக வளர்ச்சி
அமித் ஷாவின் அரசியல் பயணத்தை பார்க்கும்போது, நீண்டகால திட்டமிடலுக்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்று பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர். குஜராத்தில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் பின்னர் தேசிய அரசியலில் மிகப்பெரிய வியூக நிபுணராக அவரை உயர்த்தியது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிகளுக்கு பின்னால் அவரது திட்டமிடலே முக்கிய காரணம் என்று கட்சியினர் நம்புகின்றனர்.
புதிய அரசியல் சூழல்
இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திலேயே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் உருவாகும் என்று அமித் ஷா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழகத்தில் உருவாகி வரும் புதிய அரசியல் சூழல், கூட்டணி மாற்றங்கள் மற்றும் புதிய கட்சிகளின் எழுச்சி ஆகியவை அந்த கணிப்பை மீண்டும் நினைவுபடுத்துவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்கு வங்கம்
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில், "மேற்கு வங்கத்தில் கிடைத்த வெற்றி என்பது ஒரு தேர்தல் வெற்றி மட்டுமல்ல. அந்த மாநிலத்தின் அரசியல் சூழலையே மாற்றிய வெற்றி. அதுபோல அடுத்த முக்கிய இலக்கு தமிழகம்" என்று அமித் ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துகள் உண்மையில் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டத்தை வெளிப்படுத்துகிறதா அல்லது நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான அரசியல் பேச்சா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
2031 தேர்தல்
ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. 2026 தேர்தல் முடிவால் பாஜக தனது தமிழக கனவை கைவிடவில்லை. மாறாக, 2031 தேர்தலை இலக்காக வைத்து இன்னும் தீவிரமாக களமிறங்கத் தயாராகி வருகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள், புதிய வியூகங்கள், புதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அமித் ஷாவின் இந்த நீண்டகால அரசியல் கணிப்பு பலிக்குமா? அல்லது தமிழக அரசியல் மீண்டும் பழைய பாதையிலேயே தொடருமா? என்பதற்கான பதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிடைத்து விடும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications