அமித்ஷா போட்டு கொடுத்த ஸ்கெட்ச்.. மிஷன் இம்பாசிபிள்-ஐ முடித்த அண்ணாமலை! டிடிவி வந்தது இப்படித் தான்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, தமிழக அரசியல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக திமுக ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு அரசியல் யூகங்களையும், வியூகங்களையும் அவர் கையில் வைத்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்த முயற்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதம் சில சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் டிடிவி தினகரன் சரி செய்ய அண்ணாமலையையும் அமித் ஷா பயன்படுத்திய நிலையில், அதனை அண்ணாமலையும் முடித்துள்ளார் என்கின்றனர் பாஜகவினர்.
அதிமுக - பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதே அமித்ஷாவின் எண்ணமாக இருந்தது. காரணம், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிளவு படுவதை அவர் விரும்பவில்லை.

அரசியல் வியூகம்
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, அதிமுகவின் வாக்கு வங்கி பலவீனமடைந்துள்ளது என்பதே டெல்லியின் கணக்கு. ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க முடியாது என்ற முடிவில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தார். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக - பாஜக இணைப்பு அவசியம் என்பதை எடப்பாடி பழனிச்சாமியும் உணர்ந்தே இருந்தார்.
அமித் ஷா
மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டதால்தான் பெரும் தோல்வி ஏற்பட்டது என்றும், இரு கட்சிகளும் இணைந்தால் சுமார் 41 சதவீத வாக்குகளை பெற முடியும் என்றும் எடப்பாடி கணக்கு போட்டிருந்தார். அதனால்தான் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க அவர் சம்மதித்தார். இதனிடையே, பாமக, தேமுதிக உள்ளிட்ட பழைய கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விவகாரத்தில் எடப்பாடியின் பிடிவாதத்தை தளர்த்துவதற்காக அமித்ஷா தனி வியூகத்தை வகுத்ததாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் கூட்டணி
அதன்படி, அதிமுக தரப்பை சமாளிக்க நயினார் நாகேந்திரனையும், ஓபிஎஸ் - டிடிவி தினகரன் தரப்பை சமாளிக்க அண்ணாமலையையும் பயன்படுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டெல்லி பயணம் மேற்கொண்டு அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தார். பின்னர் மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த சந்திப்புகள் நடைபெற்றதா என்ற கேள்விகள் எழுந்தன.
அண்ணாமலை
இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராக கருதப்படும் நயினார் நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்தபோது, அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்ணாமலையின் இந்த செயல்பாடுகள் காரணமாக, ஒருகட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. மீண்டும் கூட்டணி பேச்சு தொடங்கியபோது, அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி தரப்பு முன்வைத்தது. அதை பாஜக மேலிடமும் ஏற்றுக் கொண்டு, அண்ணாமலையை அந்த பதவியில் இருந்து நீக்கியது.
ஓபிஎஸ் - டிடிவி தினகரன்
இதன் பிறகு, அவர் வெளிப்படையான அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், பாஜக தலைமை கொடுத்த பணிகளை மறைமுகமாகவும், திட்டமிட்ட வகையிலும் கச்சிதமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வரிசையில்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்கும் முயற்சியும் நடைபெற்றது. அதிமுகவுடன் பேசுவதற்காக நயினார் நாகேந்திரனையும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்ணாமலையையும் நியமித்தது அமித்ஷாவே என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி
மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் நேரடியாக சேர்க்க வேண்டாம் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களை இணைத்துக் கொள்வோம் என்றும் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்காக, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்புக்கு சீட்டுகளை ஒதுக்கிக் கொள்வோம் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தையும் தாண்டி, 2026 தேர்தலை முன்னிட்டு அமித் ஷா கூட்டணியை முடித்துள்ளார் என்கின்றனர்.
-
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications