2026ல் கூட்டணி ஆட்சி தான்! அமித்ஷா உறுதி! அதிமுக-பாஜக கூட்டணியை எடப்பாடி முறிப்பாரா?- மருது அழகுராஜ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மதுரையில் அமித்ஷா இன்று பேசினார். இதனால் எடப்பாடி, பாஜக உடனான கூட்டணியை நாளைக்கே முறித்து கொள்வதாக அறிவிப்பாரா? என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று இரவு மதுரை வந்தார். காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

amit-shah-says-in-tamil-nadu-aiadmk-bjp-alliance-will-form-government-now-maruthu-alaguraj-raise

பிறகு மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறினார். இதுதொடர்பாக அமித்ஷா கூறியதாவது:

‛‛மதுரை பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். அந்தவகையில், இன்று நடந்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டமும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தைக் கொண்டு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், என்னுடைய செவியும் சிந்தையும் தமிழகத்தின் மீதுதான் இருக்கிறது'' என்று பேசினார்.

தமிழகத்தில் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி என்பது தேர்தலுக்கானது. பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும். கூட்டணி ஆட்சி அமையாது. ஆட்சியில் பாஜகவுக்கு இடம் என்பது அளிக்கப்படாது என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை முறிப்பாரா? என்று மருது அழகுராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசி வருகிறார்.

இதுதொடர்பாக மருதுஅழகுராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛2026ல் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான்அமித்ஷா உறுதி.. அப்ப மானஸ்தர் எடப்பாடி பாஜக வுடனான கூட்டணியை நாளைக்கே முறித்து கொள்வதாக அறிவிப்பாரோ..?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த பதிவை அவர் #கூட்டணி முறியுமோ, #என்னநாஞ்சொல்றது ஆகிய ஹேஷ்டேக்குகளில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+