மண்ணைக் கவ்விய பாஜக.. தமிழகம் வரும் அமித் ஷா! ஜரூராக நடக்கும் வேலைகள்.. பரபரப்பான பாஜக தலைகள்!
சென்னை: வரும் 9ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாடு, புதுச்சேரி வருகை தரும் நிலையில், 8ஆம் தேதி புதுச்சேரி வரும் அவர், 9ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 9ம் தேதி திருவண்ணாமலை, பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழகம் வருகிறார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் .ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி வரும் அவர் கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வழங்கும் மதிப்புமிக்க கலர்ஸ் விருதை வழங்குகிறார்.

அதன் பிறகு திருவண்ணாமலை செல்லும் அமித்ஷா அங்கு புகழ்பெற்ற பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகளில் பங்கே இருக்கிறார். இதை எடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அமித்ஷா வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக பாஜக படுதோல்வியை சந்தித்தது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக நிர்வாகிகளை டெல்லியில் அழைத்து ஆலோசனை நடத்திய அமித்ஷா, தற்போது முதன்முறையாக தமிழகம் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதுச்சேரியில் தங்கும் அமித்ஷா அங்குள்ள அரசியல் சூழல், அமைச்சரவை விவகாரங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் திருவண்ணாமலை வரும் அவர் தமிழக பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.
தேர்தல் தோல்வி, அண்ணாமலை சென்றதால் கட்சியில் ஏற்பட்டுள்ள சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு அமித்ஷா முதன் முறையாக தமிழகம் வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
