தென்மாநில முதல்வர்கள் மாநாடு! இன்று தமிழகம் வரும் அமித்ஷா! சிஎம் விஜய் -டிகே சிவக்குமார் சந்திப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை அருகே உள்ள கோவளத்தில் தொடங்க உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சனை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த மாநாட்டில் பேசப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். தென் மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amit Shah DK Shivakumar Mekedatu Dam

சென்னை அருகே உள்ள கோவளத்தில் நட்சத்திர ஹோட்டலில் நாளை காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த மாநாடு பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று அனைத்து மாநில பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திக்கிறார்.

தென்மாநில முதல்வர்கள் மாநாடு

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி கே சிவக்குமார், கேரளா முதல்வர் விடி சதீசன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

காவிரி நீர் பங்கீடு

இந்த மாநாட்டில் தென் மாநிலங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காவிரி நீர் பங்கீடு, கர்நாடகாவின் நீண்ட நாள் கோரிக்கையான மேகதாது அணை திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்படலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் ஒரே மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் இந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக ஆலோசனை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய்

மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும். கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் வியாழக்கிழமை மாலை சென்னையில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விஜய் பெங்களூரு செல்ல இருந்து நிலையில் கடைசி நேரத்தில் அது ரத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் வரும் டி.கே. சிவகுமார் விஜயை சந்தித்து பேசலாம் என்கின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு

காவேரி விவகாரம் மட்டுமல்லாது தென் மாநிலங்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள மற்றொரு விவகாரம் இந்த மாநாட்டில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுதான் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசிறப்பு மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைய கூடும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உள்ளது.

தமிழக சட்டசபை

குறிப்பாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ள தென் மாநிலங்களுக்கு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சொல்லி வருகின்றன. இந்த நிலையில் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்திலும் தென் மாநில முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

அமித் ஷா

இதற்கிடையே இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் கோவளம் செல்லும் அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதோடு இரவு தென் மாநில முதல்வர்களுடன் இரவு உணவு அருந்த உள்ளார். நாளை காலை மாநாட்டை முடித்த பிறகு 3.30 மணிக்கு மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் அமித்ஷா வழிபாடு செய்கிறா. இதையொட்டி கோவளம் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

மாநாடு நடைபெறும் ஹோட்டல் வளாகம் முதல் முக்கிய சாலைகள் வரை அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தேசிய அளவில் பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த மாநாடு அடித்தளமாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+