அமித்ஷா இன்று தமிழகம் வருகை.. புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப் பயணம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக அந்தமானில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சிக்கு இன்று மாலை வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தில் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தமானில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தரவுள்ளார். பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுவிட்டு சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பின்னர், இரவு அந்த விடுதியிலேயே தங்கவுள்ளார். 2 ஆம் நாளான திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
பிற்பகல் 1.20 மணிக்கு கார் மூலமாக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று டெல்லிக்கு புறப்படவுள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டிரோன்கள் பறக்கத் தடை
மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி, திருச்சி, புதுக்கோட்டையில் அவர் பயணம் செய்யும் சாலை வழிகள், விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications