அதிமுகவிடம் தென் சென்னையை "தட்டி பறிக்கும்" பாஜக.. கோவிலம்பாக்கத்தில் ஷாக் கொடுத்த அமித்ஷா
சென்னை: தமிழகத்திற்கு வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சில விஷயங்களை சொல்லியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதிலிருந்தே திமுகவை டெல்லி பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக வாரிசு அரசியல் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதியையும் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாது, மூன்றாவது அணிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் 3ஆவது அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள்.
அது போல் முதல்வர் ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என திமுக மூத்த நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டதால் இந்த தேர்தலில் எப்படியாவது வென்றால்தான் எதிர்காலம் என்ற நிலை உள்ளது.
அது போல் ஏற்கெனவே 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியை செய்த பாஜக மீண்டும் தேர்தலில் வென்றால் ஹாட்டிரிக் வெற்றியாக கருதப்படும். இந்த நிலையில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வடமாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக கணிசமாக வென்றாலும் தென்னிந்தியாவில் நிறைய இடங்களில் வெல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் டெல்லி தலைமைக்கு இருக்கிறது.
இதனால் ஆபரேஷன் சவுத் என்பதற்கிணங்க பாஜக தென்னிந்தியாவிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்றைய தினம் ஆந்திராவில் பொதுக் கூட்டத்தை நடத்தினர். இதையடுத்து அமித்ஷா நேற்று இரவு சென்னைக்கு வந்தார்.

இன்று கோவிலம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார். அதில் 3 முக்கியமான விஷயங்களை அவர் பேசியுள்ளார். அதில் முக்கியமானது தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு. தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற பாஜகவினர் உழைக்க வேண்டும். அடுத்ததாக தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு இரு முறை வந்த போதிலும் அதை தமிழகம் இழந்துவிட்டது. இதற்கு காரணம் திமுகதான் என தெரிவித்துள்ளார்.
இதில் 3 விஷயங்கள் அதிமுகவுக்கும் ஒரு விஷயம் திமுகவுக்கும் அமித்ஷா தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கும் என சொல்லப்பட்டது. அப்படியென்றால் அதிமுகதான் எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்யும். எந்த தொகுதிகள் என்பதையும் முடிவு செய்யும். பாஜக கேட்கும் தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்றால் அந்த தொகுதியை கொடுத்துவிடும். இல்லாவிட்டால் இழுபறி நீடிக்கும்.
கடந்த முறை மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேசும் போது 9 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெறுவோம் என்றார். ஆனால் அமித்ஷாவோ 25 தொகுதிகள் என்கிறார். மொத்தம் தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி என்றால் மீதமுள்ள 15 தொகுதிகளில் போட்டியிட அதிமுக எப்படி ஒப்புக் கொள்ளும். அந்த 15 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் அதிமுகவுக்கு 10 தொகுதிகள் கூட தேராத நிலை இருக்கிறது.
இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது போல் அமித்ஷா குறிப்பிட்டு தென் சென்னை என கூறியிருக்கிறார். இந்த தொகுதியில் அதிமுக, திமுக காங்கிரஸ் என மாறி மாறி வென்றுள்ளது. அதிமுக 2 முறையும் திமுக மூன்று முறையும் வென்றுள்ளது. எனவே இந்த தொகுதியை குறி வைத்து அமித்ஷா கேட்கும் போது அதிமுக விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இன்றைய தினம் சென்னை வந்துள்ள அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் திமுகவை மின்சார துண்டிப்பு, தமிழர் பிரதமராகும் வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications