அம்மா உணவகங்களுக்கு வந்த புது பிரச்சினை.. தள்ளாடும் நிதி நிலை.. மூடப்படும் அபாயம்? அடுத்து என்ன
சென்னை: அம்மா உணவகங்களின் வருவாய் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மறுபுறம் செலவுகள் அதிகரித்தே வருகிறது. இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள் அதிமுக அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருந்தது.

முதலில் நகர் முழுக்க 407 உணவகங்கள் இருந்த நிலையில், இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் எண்ணிக்கை 399ஆகக் குறைந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா உணவகத்தில் என்ன விலைக்கு உணவுகள் விற்கப்பட்டதோ அதை விலைக்குத் தான் இப்போதும் உணவு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் தயிர்ச் சாதம் மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற அனைத்து உணவுகள் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட இதன் விற்பனை தொடர்ந்து சரிந்தே வருகிறது.
பல்வேறு காரணங்களால் சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களின் வருமானம் குறைந்துள்ளது. அதேநேரம் செலவுகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் சென்னை பட்ஜெட் மதிப்பீட்டில் வெளியிடப்பட்டு இருந்தது. பணியாளர்கள், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டணம், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் உபகரணங்களுக்கான கட்டணம் எனச் செலவு நீண்டு கொண்டே இருக்கிறது..

இதில் குறிப்பாக ஊழியர்களுக்கான ஊதியம் தான் அதிக செலவாக இருக்கிறது. கடந்த 2024-25 நிதியாண்டில், இதற்காக ₹41.7 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. அதேநேரம் அம்மா உணவகங்களில் பணிபுரியும் சில ஊழியர்கள் விதிமீறல்களிலும் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்குச் சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த நிதியாண்டில் அம்மா உணவகங்களின் வருமானம் ரூ.15.35 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் எப்போதும் எதிர்பார்க்கப்படும் வருமானத்தைக் காட்டிலும் உண்மையாகக் கிடைக்கும் வருமானம் குறைவாகவே இருந்துள்ளது. உதாரணமாகக் கடந்த 2021-22 நிதியாண்டில் வருமானம் ₹24.55 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதிலும், உண்மையாக வருமானம் சுமார் 50% குறைவாக ரூ.12.4 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த 2023-24 நிதியாண்டில், பட்ஜெட் அம்மா உணவகங்களில் இருந்து மதிப்பீட்டில் ₹15.85 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் ₹14.55 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இப்படி வருவாய் தொடர்ந்து குறைந்தாலும் அம்மா உணவகங்களைத் தொடர்ந்து நடத்தச் செலவுகள் கணிசமாக ஆகிக் கொண்டு தான் இருக்கிறது. முன்பே கூறியது போலச் சம்பளத்திற்குத் தான் அதிக நிதி செலவாகிறதாம்.
செலவுகள் அதிகரிப்பதால் மற்ற பராமரிப்பு செலவுகளைச் செய்ய முடிவதில்லை. கடந்த 2022-23 நிதியாண்டிலும் சரி, 2023-24 நிதியாண்டிலும் புதிதாக உபகரணங்களை வாங்க எந்த செலவும் செய்யப்படவில்லை. நிதி இல்லாததால் தேவையான பொருட்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் அம்மா உணவகங்களில் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் வருவாய் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மறுபுறம் செலவுகள் அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக அம்மா உணவகங்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்படும் அபாயம் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications