"ரியல் ட்விஸ்ட்".. சசிகலாவுக்கு கார் தந்தாரே தட்சிணாமூர்த்தி.. என்னாச்சு தெரியுமா.. இதுதான் தினகரன்!
அமமுக தேர்தலில் போட்டியிட தட்சிணாமூர்த்திக்கு சீட் தந்துள்ளது
சென்னை: சசிகலாவுக்கு கார் தந்தாரே அதிமுகவின் தட்சிணாமூர்த்தி ஞாபகம் இருக்கா? அவருக்கு தன் விசுவாசத்தை காட்டி உள்ளது அமமுக..!
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா அன்னைக்கு திரும்பி வந்தார் இல்லையா.. அப்போது தமிழக போலீஸ் சார்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதிமுக கொடி கட்டிய காரிலேயே பயணித்தபடியால், தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டது.

தட்சிணாமூர்த்தி
அப்போதுதான், டக்கென்று தட்சிணாமூர்த்தியின் காரில் ஏறி கொண்டார் சசிகலா.. அதுவரை சசிகலா கார் மாறி பயணிக்கும் விஷயமே அங்கிருந்த யாருக்கும் தெரியாது.. மொத்த மீடியாவும் இதை பார்த்து பரபரப்பானார்கள்.. யார் இவர் என்று ஆச்சரியமானார்கள்.. பிறகுதான் இவர் திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் என்பதும் தெரியவந்தது.

கட்சி கொடி
அதிமுக நிர்வாகி என்பதால், அந்தக் காரில், அதிமுக கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை.. அதனாலேயே கெத்தாக, கட்சி கொடியை பறக்கவிட்டு அந்த காரல் சசிகலா சென்னை வந்தார்.இந்த விஷயடம் தெரிந்ததுமே சசிகலாவுக்கு கார் கொடுத்த தட்சிணாமூர்த்தியை அப்போதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டனர்.

அமமுக
இப்போது அதே தட்சிணாமூர்த்திக்கு அமமுகவில் சீட் தந்திருக்கிறார்கள்.. உண்மையில் சசிகலாவுக்கு கார் தந்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தாராம்.. மேலும் செம்மரக்கடத்தல் புள்ளிகளின் ஆளுங்கட்சி புள்ளிகள் மாறி வருகிறார்கள் என்று ஸ்ட்ரைட்டாகவே அட்டாக் செய்து பேசினாராம்.

சூப்பர் வாய்ப்பு
இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை கேட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை போலும்.. இந்த கடுப்பில்தான், சசிகலாவை வரவேற்க, காரை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கே போயுள்ளார்.. கர்நாடக எல்லையான ஜூஜூவாடிக்கு அருகே வந்தபோதுதான், தட்சிணாமூர்த்தியின் காருக்கு சசிகலா மாறியிருக்கிறார். தட்சிணாமூர்த்தியை கட்சியை விட்டு தூக்கியதுமே, கண்டிப்பாக அமமுகவில் இணைவார் என்று உறுதியாக சொல்லப்பட்டது.. இப்போது மாதவரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்து, அவரை குளிரவைத்திருக்கிறது அமமுக..!












Click it and Unblock the Notifications