அமமுக தேர்தல் அறிக்கை மார்ச் 12ல் ரிலீஸ் - என்ன சொல்லப்போகிறார் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை மார்ச் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெண்கள், முதியோர்கள், மாணவர்களை குறிவைத்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளாராம் டிடிவி தினகரன். சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வரும் 12 ஆம் தேதியன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் வரும் 12.03.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். இப்பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்கள்.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இரண்டு கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அட்டாக் செய்யும் வகையில் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிப்பாரா பார்க்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications