புதுச்சேரி பண்ணைவீட்டில் ஓய்வெடுக்கும் டிடிவி தினகரன்... திடீர் அமைதிக்கான பின்னணி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல் டிடிவி தினகரன் கட்சி தொடர்பான அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழு ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் தொலைபேசி மூலம் அழைத்துப் பேசும் இவர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தி வருகிறார்.

இதனிடையே திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், உட்பட இன்னும் பல அரசியல் கட்சிகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி நாளை கூட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்த இருக்கின்றன.
இந்நிலையில் டிடிவி தினகரன் இது தொடர்பான விவகாரங்களில் அறிக்கைகள் வெளியிட்டாலும் அதில் முன்பிருந்த காரசாரமான வார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென டிடிவி தினகரன் அமைதி காப்பதன் பின்னணியில் சசிகலாவும் சுப்பிரமணிய சுவாமியும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சுப்பிரமணியசுவாமி அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அரசு மீதான அட்டாக்கை டிடிவி தினகரன் சற்று குறைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பாக அமமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, அதுபோன்றெல்லாம் இல்லை என்றும், கொரோனா காலத்தில் அதை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை தினகரன் கவனிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நிர்வாகிகளோடு அவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி களநிலவரத்தை அப்டேட் செய்துகொள்வதாகவும் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications