"அந்த 18".. அடிச்சு தூக்கும் ஸ்டாலின்.. "கை" வைக்க போகும் கட்சி.. முதல்முறையாக மிரளும் கூல் தலைவர்!
அமமுகவில் இருந்து மேலும் சிலர் திமுகவில் செல்ல போவதாக கூறப்படுகிறது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. மேலும் சில நிர்வாகிகள் திமுக பக்கம் வர போகிறார்களாம்.. யார் அவர்கள்? இதற்கு பின்னணி காரணம் என்ன?
டிடிவி தினகரன் இப்போதுதான் ஃபார்முக்கு வந்துள்ளார்.. தேர்தல் முடிந்தபிறகு தினகரனையோ காணோம்.. எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்ற விவரமே தெரியாமல் இருந்தது..
மகளின் கல்யாண வேலையில் பிஸியாக இருந்த நிலையில், இவ்வளவு நாள் ஒதுங்கியே அரசியல் செய்து வந்த நிலையில், தற்போதுதான் விழித்து கொண்டுள்ளார்.

ஜெயலலிதா
ஆனால், அதற்குள் முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கிவிட்டது திமுக.. செந்தில்பாலாஜி போட்ட ஸ்கெட்ச்தான் தற்போது ஒர்க் அவுட் ஆகி கொண்டிருக்கிறது.. கொங்கு மண்டல பழனியப்பன் திமுகவுக்கு தாவ போவதாகவும், இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் தினகரனுக்கு ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளது. ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.. அதற்காக மனவருத்தமும் அடையவில்லை என்கிறார்கள்.

தினகரன்
சசிகலா தலையிட்ட பிறகுதான், போனை போட்டு தினகரனை சத்தம் போட்ட பிறகுதான், மெல்ல இயல்புக்கு வந்துள்ளார் தினகரன்.. அதன்படியே உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம்.. தளர வேண்டாம் என்று தொண்டர்களையும் குஷிப்படுத்தி ஒரு லெட்டர் எழுதினார்.. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு விஷயம் கசிந்து வருகிறது.

அமைச்சர்
ஆனால், இவர்களில் சிலரே திமுக பக்கம் தாவ போவதாக செய்திகள் வந்துகொண்டிருப்பது அமமுக கூடாரத்தை அசைத்து வருகிறது.. 18 எம்எல்ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பின்போதே இவர்களது அரசியல் எதிர்காலம் என்னாவது? என்ற கேள்வி எழுந்தது.. சசிகலாவை நம்பி வந்தவர்கள்.. சசிகலா சிறைக்கு போனபிறகு, ஜெயிலுக்கு கோர்ட், கேஸ் என்று 2 வருடத்துக்கு முன்பே அரசியலில் அனைத்தையும் தொலைத்தவர்கள் இந்த 18 பேரும்!

அமமுக
இப்போது சசிகலா விரைவில் என்ட்ரி தர உள்ளதாக தெரிகிறது.. ஆனாலும் அது அமமுகவில் உள்ளவர்களுக்கு எந்தவித தெம்பையும் தரவில்லை.. சசிகலாவின் குறியும் அமமுக மீது இல்லை.. அதிமுக நிர்வாகிகளையே குறி வைத்து கொண்டிருக்கிறார்.. இப்படியே போனால், அமமுக தொண்டர்களைக்கூட சசிகலாவால் திரட்ட முடியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வருகிறது. இந்த விஷயமும் தினகரன் காதுக்கு எட்டி உள்ளது.

ஆய்வு கூட்டம்
இப்போதுவரை திமுக பக்கம் யாரெல்லாம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள்.. யாரெல்லாம் தூது விட்டு கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. எனவே, இதை பற்றி தெரிந்து கொள்ள, தொகுதி வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த தினகரன் உத்தரவிட்டார்.. காரணம், அந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைத்தார்.

முயற்சி
ஆனால், அங்கேயும் ஒரு ஷாக் கிடைத்துள்ளது.. கூட்டத்துக்கு பெரும்பாலானோர் வரவே இல்லையாம்.. அதுவும் முக்கியமான நிர்வாகிகளையும் காணோமாம்... அதேசமயம் வந்தவர்கள் யார் யாரென்று பார்த்தால், சிலர் செந்தில்பாலாஜியுடன் நட்புடன் இருப்பவர்களாம்.. மேலும் சிலர் சசிகலாவுடன் ஆடியோவில் பேசியவர்களாம்.. இதனால் தினகரன், ஆப்சென்ட் ஆனவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்களாம்.. இப்போதுதான் தினகரன் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது..!












Click it and Unblock the Notifications