தவெகவிற்கு நான் ஆதரவு கடிதம் தரவில்லை.. அமமுக எம்எல்ஏ வாக்குமூலம்.. வசமாக சிக்கிய விஜய்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றுஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், "நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு நிழற்பட நகலை (Photocopy) வைத்துக்கொண்டு விஜய் தரப்பு ஆளுநரை ஏமாற்ற முயன்றதாகத் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு நள்ளிரவு அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள "கடத்தல் மற்றும் போலி கடிதம்" புகார் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்

நேற்று மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்த விஜய், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், இந்த உரிமை கோரலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இருப்பதாக கூறி 120 எம்எல்ஏக்கள் ஆதரவை காட்டி மெஜாரிட்டி கணக்கு காட்டி இருந்தார். மாறாக, அமமுகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே பெரும் சர்ச்சைக்குப் புள்ளியாக அமைந்தது.

AMMK Mla Kamaraj says that he did not sign the letter support Vijay TVK rule

குதிரை பேரம் மற்றும் கடத்தல் புகார்

நேற்று இரவு மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அதிரடி புகார் அளித்தார். இது குறித்து நள்ளிரவில் ஆளுநர் ஆர்.வி ஆர்லேகரை நேரில் சந்தித்து முறையிட்ட தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.

"எங்களிடம் இருப்பது ஒரே ஒரு எம்.எல்.ஏ தான். கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாது என்பதால், திட்டமிட்டே எங்கள் எம்.எல்.ஏ-வை குறிவைத்து அவர்கள் கடத்தியுள்ளனர். ஒரு போலி கடிதத்தை வைத்துக்கொண்டு ஆளுநர் எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

போலி கடித சர்ச்சை: ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?

செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் விவரித்த தகவல்கள் அதிர வைப்பதாக இருந்தன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுநரிடம் அளித்த ஆதரவு கடிதத்தில் எம்.எல்.ஏ காமராஜின் கையெழுத்து இருந்ததாகவும், அதன் அசல் பிரதியை ஆளுநர் கேட்டபோது அவர்கள் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையிலிருந்து எம்.எல்.ஏ காமராஜுக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. "நீங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தீர்களா?" என்ற கேள்விக்கு, "நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை, நேரில் வருகிறேன்" என்று கூறிவிட்டு காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.

"நான் அதிமுகவிற்குத்தான் ஆதரவு" - எம்.எல்.ஏ காமராஜ்

ஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், "நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு நிழற்பட நகலை (Photocopy) வைத்துக்கொண்டு விஜய் தரப்பு ஆளுநரை ஏமாற்ற முயன்றதாகத் தினகரன் குற்றம் சாட்டினார்.

"சட்டம் ஒழுங்கு சீர்குலையும்" - தினகரன் எச்சரிக்கை

"ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு மோசடிகளில் ஈடுபடும் சக்திகள் கையில் தமிழகம் கிடைத்தால் மாநிலத்தின் கதி என்னவாகும்?" என தினகரன் ஆவேசப்பட்டார். "இது போன்ற மோசடி சக்திகள் ஆட்சிக்கு வந்தால் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது. இது அராஜகத்தின் உச்சம்," என்றும் அவர் சாடினார். இப்போது எம்எல்ஏ காமராஜ் கொடுத்த அந்த பேட்டி விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. விஜய் குதிரை பேரம் நடத்துவதாகவும் மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+