எடப்பாடி பழனிச்சாமி அண்ணனா... அப்ப டிடிவி.. தங்க தமிழ்செல்வனுக்கு புகழேந்தி சரமாரி கேள்வி
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என தங்க தமிழ்செல்வன் சொன்னால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் யார் என அமமுக புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார். திடீரென எடப்பாடி பழனிச்சாமியை தங்க தமிழ்செல்வன் புகழ்வது ஏன் என புரியாத புதிராக உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் உலா வருகின்றன. இதனை உறுதிபடுத்தும்விதமாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என பேட்டி அளித்தனர்.

இதனிடையே தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பில் சாதனை செய்துள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்றும் கூறி தங்க தமிழ்செல்வன் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பாராட்டினார்..
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமமுகவின் புகழேந்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என தங்க தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார்? இது போன்ற பேச்சுக்கள் சரியானதா என்பதை தங்க தமிழ்செல்வன் யோசிக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறார்.
ஆனால் அவருடைய சொந்த ஊரிலேயே பிளஸ்டிக் ஒழிப்பில் அரசு சாதனை படைத்துள்ளதாக அமைச்சர்களே சொல்லாத போது தங்கதமிழ்செல்வன் கூறி வேண்டியதன் அவசியம் என்ன? இந்த அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் ஏன் அவர் புகழ்ந்தார் என்பத புரியாத புதிராக உள்ளது. சின்னம் சரியில்லை என்ற அவரது கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.
தங்கதமிழ்செல்வனின் அண்மைக்கால நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.அவர் கூறும் கருத்துக்களை அதிமுக அமைச்சர்களே கிண்டலாக பார்க்கிறார்கள். அதிமுகவுடன் சேருவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவுடன் அமமுக எந்த சமசர திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை" இவ்வாறு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications