வலிமையாகும் அமமுக.. வெளியானது 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. ஆர்.கே நகரில் இறங்கும் டிடிவி விசுவாசி!
சென்னை: அமமுகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுக மிகவும் வலிமையாக கூட்டணியை அமைத்து வருகிறது. தேமுதிகவும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பதால் அமமுக கூட்டணி மிகப்பெரிய மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது.
ஒரு பக்கம் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி அமமுக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேமுதிக
இப்படி முக்கிய சிறுபான்மையினர் கட்சிகள் அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை அமமுக பெரிய அளவில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு கூடுதல் பலமாக தேமுதிகவும் அமமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது.

நேற்று
நேற்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அமமுக சார்பாக தற்போது நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேரும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 50 பேரும் இருந்தனர்.

கடைசி பட்டியல்
கடைசியாக வெளியான பட்டியலில் 130 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த நிலையில் தற்போது 7 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த முறை ஆர்கே நகரில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வென்ற நிலையில் இந்த முறை ஆர்.கே.நகரில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுகிறார்.
- அரக்கோணம் (தனி) - K.C.மணிவண்ணன்
- இராணிப்பேட்டை - G.வீரமணி
- ஆற்காடு - N.ஜனார்த்தனன்
- கீழ்பென்னாத்தூர் - PKS.கார்த்திகேயன்
- அம்பாசமுத்திரம் - செ.ராணி ரஞ்சிதம்
- நாங்குநேரி -S.பரமசிவ ஐயப்பன் போட்டியிடுகிறினார்கள்.

என்ன காரணம்
இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் தினகரன் போட்டியிட உள்ளார். ஆர்கே நகருக்கு இவர் தேர்தல் வெற்றிக்கு பின் செல்லவில்லை என்ற புகார் உள்ளது. இதனால் ஆர். கே நகரில் டிடிவி தினகரனின் விசுவாசி டாக்டர் காளிதாஸ் போட்டியிடுகிறார்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications