தமிழக கஜானாவை தூர் வாரிட்டாங்க.. ரூ.1000, 1500 தருவோம்னு சொல்வதை நம்பாதீங்க.. டிடிவி தினகரன்
சென்னை: தமிழக கஜானா தூர்வாரப்பட்டுள்ளது என்றும் எனவே, மாதம் ரூ.1000 அல்லது 1500 உதவித் தொகை தர முடியாது என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் மருது சேனை அமைப்பு தலைவர் ஆதிநாராயணனுக்கு ஆதரவு தெரிவித்து செக்கானூரணி தேவர் சிலை அருகே டிடிவி தினகரன் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், மதுரையில் திடீரென புகழ்பெற்ற சிலர், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல் சுற்றித் திரிகிறார்கள். மக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் எண்ணம் நிறைவேறாது.
ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் துரோகம் செய்தவர்களை வேரோடு சாய்க்கவே அமமுக கூட்டணி புறப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் தொழிற்சாலை உருவாக்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டபோது, தங்கள் அரசு அமைந்ததும் குடும்ப தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து, போகாத ஊருக்கு வழி சொல்பவர்களை நம்பி வாக்களிக்க வேண்டாம்.
Recommended Video
நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications