Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினகரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசுவாரே.. அமமுகவின் சசிரேகா.. அவர் அதிமுகவுக்கு போயிட்டார்!

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு கணவருடன் இணைந்தார் சசிரேகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசுவாரே...அமமுகவின் சசிரேகா.. அவரும் இப்போது கட்சி தலைமையை கைவிட்டு விட்டார். கணவனை அழைத்து கொண்டு முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துவிட்டார்.

சசிரேகா.. அமமுகவின் செய்தி தொடர்பாளர்.. டிவி விவாதங்களை பார்ப்பவர்களுக்கு இவரை நல்லாவே தெரியும். சிஆர் சரஸ்வதியை விட இவர் ஆவேசமாக பேசுவார்.

AMMK Sasirekha has joined in AIADMK Party

தினகரனுக்கு இப்படியெல்லாம் சப்போர்ட் ஆட்கள் இருக்கிறார்களா என்று அந்த ஷோக்களை பார்க்கும்போதுதான தெரியும்.

ஏதாவது மாற்று கட்சிக்காரர்கள் அதிலும் அதிமுகவினர் ஒரு குறை சொல்லிவிட்டால் போதும், வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழிய சண்டை போடுவதுடன், டிஆர்பி ரேட் உடன் நம் BP-யையும் எகிற வைத்துவிடுவார் சசிரேகா.

ஆனால் எப்போது தேர்தல் ரிசல்ட் வந்ததோ எல்லாமே கப்சிப்தான். ஒரு சத்தமும் காணோம், பேட்டியும் தரவில்லை. இந்த நிலையில், ஒவ்வொருவராக அமமுகவில் இருந்து கழண்டு போய் திமுகவில் இணைந்து வருகிறார்கள் என்றால், சசிரேகாவோ யூ-டர்ன் போட்டு முதல்வர் வீட்டுக்கு போய் விட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது கணவருடன் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்து கொண்டார். கூடவே தன் ஆதரவாளர்களையும் இவர் அழைத்து கொண்டு போய் உள்ளார். இவரது கணவர் பெயர் அன்பு. இவர் ஒரு வக்கீல். அமமுகவின் வழக்குகளை இவர்தான் பார்த்து கொண்டு வந்தார். ஜோடியாக இவர்கள் போய் அதிமுகவில் இணைந்துள்ளது தினகரனுக்கு அடுத்த ஷாக்கை தந்துள்ளது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+