தடாலடி TTV தினகரன்.. 22 சீட்.. லிஸ்ட்டை பாஜக தலைமைக்கு அனுப்பிய அமமுக.. எந்தெந்த தொகுதி தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக - அமமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 22 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை பாஜக தேசிய தலைமைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கணக்குகளுடன் அரசியல் கட்சிகள் சீட் வேட்டைக்குத் தயாராகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலைப் போல அல்லாமல், இந்த முறை கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில் தனி அணியை அமைக்க முயற்சி செய்து வரும் பாஜக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ், பாமக ஆகிய கட்சிகளை தங்கள் அணியில் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பாஜக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக கூட்டணி அமைத்து தேர்தலை நாங்கள் சந்திப்போம். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி வருகிறார். மேலும், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு சாதகமாக நடந்து வருகிறது என்றும் பேசி வருகிறார் டிடிவி தினகரன்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அமமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை பாஜக தேசிய தலைமைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தங்களின் விருப்ப தொகுதிகளாக 22 தொகுதிகளின் லிஸ்ட்டை அனுப்பியுள்ளதாம் அமமுக. தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரக்கோணம், ஆரணி, சேலம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 தொகுதிகளை அமமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தென் சென்னை, வட சென்னை, திருப்பூர், சிதம்பரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், நெல்லை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜகவிடம் கேட்டுள்ளது அமமுக. இந்த லிஸ்ட் பாஜக தேசிய தலைமைக்கு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமமுக அனுப்பியுள்ள விருப்ப பட்டியலைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகே, அமமுகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் எத்தனை சீட்கள் கிடைக்கும் என்பது தெரியவரும். பாஜக கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இணையப்போகின்றன என்பதைப் பொறுத்தே, அமமுகவுக்கு சீட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்திடமும் பாஜக தலைமை, விருப்ப தொகுதிகள் லிஸ்ட்டை கேட்டுள்ளதாம். பாஜக தேசிய தலைவர் நட்டா வரும் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னை வரும்போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. அமமுகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications