கூட்டணி முடிவு பண்ணும் முன்பே டிடிவி தினகரன் எடுத்த முடிவு.. கட்சியினருக்கு பறந்த அறிவிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவும் என்பது உறுதியாகியுள்ளது.

விஜய்யுடன் கூட்டணியா?
திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, விஜய்யின் தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. எனினும், தேர்தல் நெருங்கும் போது இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் எந்த கூட்டணியில் செல்வார்கள்? இல்லை தனித்து போட்டியிடுவார்களா? என்பது தெரியவில்லை. விஜய் கட்சியில் டிடிவி தினகரன் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், தவெகவில் இணைந்த செங்கோட்டையன் இது தொடர்பாக தங்களை இதுவரை அழைத்து பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.
டிடிவி தினகரன் அறிவிப்பு
அதேபோல தேர்தல் நேரத்தில் புதிய கூட்டணி கூட அமையலாம் என்றும் டிடிவி தினகரன் தனது பேட்டியில் அவ்வப்போது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இணையும் என்பது இன்னும் யூகிக்க முடியவில்லை.
பாஜக ஒருபக்கம் அழுத்தம் கொடுப்பதாகவும் சொல்லப்படும் நிலையில்தான் இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று டிடிவி தினகரன் தனது கட்சியினருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருப்ப மனு அளிக்கலாம்
'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications