ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா.. புதுசா வேஷம் போடுதே இந்த திமுக.. சுளீர்னு கேட்ட டிடிவி தினகரன்
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து டிடிவி தினகரன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம் என்று புதிய வேஷம் கட்டுவது திமுகவிற்கு வழக்கமாக போய்விட்டது என்று அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது முதல்வர் பேசியபோது, "செய் அல்லது செத்துமடி என்பது தனது கொள்கை அல்ல, செய்து முடித்துவிட்டு மடிய வேண்டும் என்பதே தனது கொள்கை" என்றார்.

அரசாங்கம்
தொடர்ந்து அவர் பேசியபோது, "நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை.. திமுக ஆட்சியின்போதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது... ஆனால், அரசாங்க கஜானாவிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை மொத்தமாக மத்திய அரசு பறித்து கொண்டு விட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி
நிதி நிலைமை பொறுத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன... அரசு கஜானாவுக்கு வரவேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதை மொத்தமாக மத்திய அரசு பறித்துவிட்டது... ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்கு தர வேண்டிய விதிகளை முழுமையாக தரப்படுவதில்லை... தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் நமக்கு வழங்கப்படுவது இல்லை" என்று கூறியிருந்தார்.

டிடிவி ட்வீட்
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது.

கருணாநிதி
இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு திரு.கருணாநிதி செய்ததை இப்போது திரு. ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தேர்தல் நேரத்தில் இஷ்டப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசிய போது திரு.ஸ்டாலினுக்குத் தெரியாதா?

எம்ஜிஆர் பாட்டு
தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கிற ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிக்கலாமா? "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது" என்று தினகரன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications