க்ரீன் சிக்னல்?.. நாள் குறிச்சாச்சு.. வரும் 16-ம்தேதி தினகரன் மகள் திருமணம்.. அதிமுக புள்ளிகள் வருகை
டிடிவி தினகரன் மகள் திருமணம் 16-ம்தேதி நடைபெற உள்ளது
சென்னை: டிடிவி தினகரனின் மகள் திருமணம் வரும் செப்டம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது.. சசிகலா தலைமையில் நடைபெற உள்ள இந்த திருமணத்தில் பல முக்கிய அதிமுக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவை மொத்தமாகவே தன்னுடைய கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் இப்போதுவரை உறுதியாக இருக்கிறார் சசிகலா.. அதற்கான முயற்சிகளையும் மறைமுகமாகவே எடுத்து வருகிறார்.
மற்றொரு பக்கம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு விட முடியுமா என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் முயற்சித்து கொண்டிருக்கிறார்..!

அதிமுக
துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், மற்றும் தன்னுடைய ஆதரவாளர்களின் துணைகொண்டே அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி மறுபக்கம் முயற்சித்து கொண்டிருக்கிறார்.. இப்படி மும்முனை போட்டிகள் அதிமுகவுக்குள் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ் அநேகமாக சசிகலா தரப்புடன் கைகோர்க்கவும் தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணம்
இதற்கான ஒரு துவக்கமாகத்தான், டிடிவி தினகரன் வீட்டு திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. தினகரனின் மகளின் திருமண நிகழ்வை வைத்து மேலும் 3விதமான கணக்குகள் போடப்பட்டன.. தினகரன் தரப்பில் எப்படியும் ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு செல்லும் என்பதால், இந்த திருமணத்தை சாக்காக வைத்து சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

ஓபிஎஸ்
அதேபோல, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை விட்ட சசிகலா, இந்த திருமண நிகழ்வில் ரீ என்ட்ரி தர இருப்பதாகவும், இந்த கல்யாணத்திலேயே சிறப்பான உரை நிகழ்த்த இருப்பதாகவும், அந்த பேருரையானது, எடப்பாடிக்கு கலக்கம் தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இப்படி ஒட்டுமொத்த தலைவர்கள் இணையும் தங்கள் வீட்டு திருமணத்தை வைத்து, அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைக்க தினகரன் மறுபக்கம் கணக்கு போட்டு வருகிறார்.

கொரோனா
கடந்த ஜுன் 23-ந் தேதியே நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் மறைந்ததை காரணமாக காட்டி இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.. மேலும் கொரோனா காலம் என்பதால், திருமணத்திற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. எனவே, திருமணத்தை ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரின் துவக்கத்தில் நடத்தலாம் என்றும் முடிவு செய்திருந்தனர்.

சசிகலா
இந்நிலையில், டிடிவி தினகரனின் மகள் திருமணம் அடுத்த மாதம் 16ம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளது.. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம்
இதையடுத்து மகளின் திருமண ஏற்பாடுகளை டிடிவி தினகரன் தீவிரப்படுத்தியுள்ளார்... ஜெயஹரிணி- ராமநாதன் துளசிக்கு வரும் செப்டம்பர் 16ம் தேதி காலை 8.30 முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.

சிக்கல்
சசிகலா தலைமையில் இந்த திருமணம் நடக்கஉள்ளது.. அதேசமயம், இந்த திருமணத்தில் அதிமுக புள்ளிகளும் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது... ஆனால் அவர்கள் யார் என்ற தகவல்கள் தெரியவில்லை.. தற்போது மிகப்பெரிய சிக்கலில் அதிமுக மேலிடம் உள்ளது.. ஓபிஎஸ் ஏற்கனவே சசிகலா பக்கம் சாய உள்ள நிலையில், கொடநாடு விவகாரத்தில் சிக்கி உள்ள எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் தயவை நாடுவாரா? இந்த திருமணத்தை சாக்காக வைத்து சசிகலாவுக்கு ஆதரவு தருவாரா? அல்லது வழக்கம்போல் பிடிவாதம் காட்டுவாரா? என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications