யாருக்கு பயம்.. எனக்கா?.. ஒரு கேள்விதான்.. பிரஸ் மீட்டிலேயே சீறிய டிடிவி தினகரன்.. என்ன நடந்தது?
சென்னை: ஆர்.கே நகரில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அமமுக - தேமுதிக இடையில் நேற்று தொகுதி பங்கீடு உடன்படிக்கை எட்டப்பட்டது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் 42 வேட்பாளர்களை அமமுக திரும்ப பெற்றுள்ளது.
அமமுக சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். ஆர். கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இந்த முறை கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

தினகரன்
இந்த நிலையில் ஆர்.கே நகர் குறித்து பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே நகரில் நான் போட்டியிட்டது ஒரு விபத்து . தலைவர்கள் இடம் மாறி போட்டியிடுவது வழக்கம்தான். எல்லா தலைவர்களும் இடம் மாறி மாறி போட்டியிடுவது வழக்கம்தான். நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தது.

விபத்து
ஆர். கே நகரில் நான் போட்டியிட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். எனக்கு அது சம்பந்தம் இல்லாத தொகுதிதான். ஆனாலும் நான் அங்கே போட்டியிட்டேன்.தேர்தலில் வெற்றியும் பெற்றேன்.

வாய்ப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நான் பெரிய குளம் போன்ற வேறு வேறு தொகுதிகளில்தான் கவனம் செலுத்தி வந்தேன். பின்னர் அவரின் தொகுதியிலேயே போட்டியிட வேண்டிய கட்டாயம். அமமுகவை வழி நடத்தும் நபராக இந்த தேர்தல் எனக்கு முக்கியமானதாக இருந்தது.

இன்னொரு தொகுதி
என்னை மீண்டும் ஆர். கே நகரிலும் இன்னொரு தொகுதியிலும் சேர்த்து போட்டியிட சொன்னார்கள். ஆனால் நான்தான் இரண்டு தொகுதி எல்லாம் வேண்டாம். தேவையில்லாமல் இடைதேர்தல் எல்லாம் வரும். ஒரு தொகுதியே போதும் என்றே முடிவு செய்துவிட்டேன்.

வாய்ப்பு
ஆர்கே நகரில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். நான் ஆர்கே நகரில் போட்டியிடாமல் போனதற்கு பயம் காரணம் இல்லை. இப்போது கோவில் பட்டியில் எனக்கு நல்ல வெற்றிவாய்ப்பு உள்ளது என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications