புகழேந்தி பேசறதை பார்த்தால்.. வேறு கட்சிக்கு போவது போல தான் உள்ளது.. வெற்றிவேல் காட்டம்
புகழேந்தி வேறு கட்சிக்கு போவது போல உள்ளதாக வெற்றிவேல் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "புகழேந்தி பேசுறதை பார்த்தால் வேற கட்சிக்கு போவது போலதான் இருக்கிறது" என்று அமமுக மூத்த தலைவர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
கோவை அதிருப்தியில் உள்ள அமமுகவினரிடம் புகழேந்தி பேசின வீடியோ பேச்சுதான் தற்போது அமமுகவில் புயலை கிளப்பி உள்ளது.

"நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை" என்றெல்லாம் வீடியோவில் புகழேந்தி பேசி உள்ளார்.
இதையடுத்து புகழேந்தி கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் குறித்தும், வீடியோ பேச்சு குறித்தும் அமமுகவின் மூத்த தலைவர் வெற்றிவேலிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு தினகரன் மீதான புகழேந்தியின் குற்றச்சாட்டுக்கு வெற்றிவேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
"தினகரனையே தான்தான் அடையாளப்படுத்தியதாக புகழேந்தி பேசியது தவறு. அதேபோல, வீடியோவை அமமுக ஐடி பிரிவுதான் வெளியிட்டதாக கூறுவதும் தவறு. டிடிவி தினகரனை இப்படி அவதூறாக பேசுவது சரியில்லை.
புகழேந்தி பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு போவதுபோலதான் இருக்கிறது. ஆனால் அதை அவர்தான் சொல்ல வேண்டும். ஒன்று மட்டும் உண்மை, அன்று ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது நேரில் சென்று பார்த்தவர் தினகரன்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications