என்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்

ஜெ.சாப்பிட்ட வீடியோ தன்னிடம் நிறைய இருப்பதாக வெற்றிவேல் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சாப்பிடுகின்ற வீடியோக்கள் என்கிட்ட நிறைய இருக்கு.. தேவைப்படும்போது அதை வெளியிடுவேன்.. வீடியோ ஆதாரங்கள் என்கிட்ட இருப்பதும் ஓபிஎஸ்சுக்கு தெரியாது" என்று அமமுக வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

ஆடியோ, வீடியோ என்றாலே இப்போதெல்லாம் வெற்றிவேல்தான் நினைவுக்கு வருகிறார். அடிக்கடி இவரது தடாலடி பேச்சும், பகீர் பேட்டியும் அதிமுக வயிற்றில் புளியை கரைத்து விடும்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை இவர் வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

வடசென்னை

வடசென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் அந்த வீடியோ வெளியிடப்பட்டதால், ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பியது அந்த வீடியோ. இப்போது திரும்பவும் வீடியோ குறித்து பேசி உள்ளார் வெற்றிவேல். வடசென்னையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர் சொன்னதாவது:

மாநில மொழி

மாநில மொழி

"மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அது தேவையற்றது. வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்கள் எல்லாம் தமிழை கற்றுக்கொண்டு வரவில்லையே. அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலம் மொழி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று மத்திய அரசு குறித்து பேசியவர், அப்படியே யூ-டர்ன் பண்ணி தமிழ்நாட்டு அரசியலுக்குள் வந்தார்.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

"மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு ஓபிஎஸ் மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓபிஎஸ். தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார். ஆனால் அதுல அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. என்னிடம் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓபிஎஸுக்கு தெரியவில்லை. ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் இன்னும் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும்போது வெளியிடுவேன்" என்றார்.

ஆதாரம்

ஆதாரம்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையம் விசாரித்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களாக இருந்தாலும் சமர்ப்பிக்குமாறு ஆறுமுக சாமி அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அப்போதெல்லாம் ஆதாரத்தை சமர்ப்பிக்காத வெற்றிவேலு, திடீரென ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தைய நாள் வீடியோ சமர்ப்பித்தற்காக, ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நடவடிக்கை?

நடவடிக்கை?

இப்போது வீடியோ ஆதாரங்கள் நிறைய உள்ளதாக பகிரங்கமாக பொதுக்கூட்டத்தில் வெற்றி வேலு பேசியிருப்பது ஓபிஎஸ்-சுக்கு எதிரானதாகவும், எச்சரிக்கையாகவும் பார்க்கப்பட்டாலும், விசாரணை ஆணையம் சார்பில் இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+