Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சி தூக்கிய அமமுக.. டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்யாமலேயே, 66 கவுன்சிலர்கள்.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளாத நிலையில் அவரது கட்சி ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர்.

அதிமுக உள்பட தனித்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன. டிடிவி தினகரனின் அமமுக கட்சியினரும் தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை. அமமுக கட்சி வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் பற்றிய முழுவிபரம் வருமாறு:

 தனித்து போட்டி

தனித்து போட்டி

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர்புற தேர்தலில் தனித்து களமிறங்கியது. இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செல்வாக்குள்ள வார்டுகளில் மட்டும் அமமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த வேட்பாளர்கள் வியூகங்கள் வகுத்து தொடர்ச்சியாக பிரசாரம் செய்து தேர்தலை எதிர்கொண்டனர்.

 102 பேர் வெற்றி

102 பேர் வெற்றி

நேற்று வெளியான தேர்தல் முடிவில் அமமுக வெற்றி வேட்பாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை மட்டும் தொட்டது. அதாவது கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட்டவர்களில் மொத்தம் 102 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். அதன்படி மாநகராட்சியில் மூவர், நகராட்சியில் 33 பேர், பேரூராட்சியில் 66 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

 எந்தெந்த நகராட்சிகள்

எந்தெந்த நகராட்சிகள்

மாநகராட்சியை பொறுத்தமட்டில் சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் தலா ஒருவர் வெற்றி பெற்றனர். நகராட்சி வாரியாக தேவக்கோட்டையில் 5, சோளிங்கர் 4, சிவகங்கை, பெரியகுளம் தலா 3, முசிறி, மன்னார்குடி, தேனி அல்லிநகரம், உசிலம்பட்டியில் தலா 2, கள்ளக்குறிச்சி, துவாக்குடி, கோவில்பட்டி, கடையநல்லூர், புதுக்கோட்டை, மேலூர், அரக்கோணம், ராமநாதபுரம், சாத்தூர், விருதுநகரில் தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

 பேரூராட்சியை கைப்பற்றி அமமுக

பேரூராட்சியை கைப்பற்றி அமமுக

பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 66 பேர் கவுன்சிலர்களாக தேர்வாகி உள்ளனர். மொத்தம் 33 பேரூராட்சிகளில் அமமுகவின் குக்கர் சின்னம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில் 9 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமமுக சார்பில் 1வது வார்டில் பானுமதி, வார்டு 2ல் உமாதேவி, வார்டு 4ல் சித்ரா, வார்டு 6ல் உமா, வார்டு 8 ல் சேகர், வார்டு 10 ல் மகேந்திரன், வார்டு 11ல் திருமங்கை, வார்டு 12ல் மலர்கொடி, வார்டு 13ல் விஜயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

 கட்சியினர் பெருமை

கட்சியினர் பெருமை

இந்த தேர்தலில் அமமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால் ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது மட்டும் தான். இந்நிலையில் தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்யாமலேயே ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியதாக அக்கட்சியினர் பெருமைபட கூறுகின்றனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு செல்வாக்கு இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Recommended Video

    கைகொடுக்காத அரசியல் வியூகம்.. பாஜக 3வது பெரிய கட்சியா? உண்மை என்ன?
     கூடுதல் வார்டுகள்...

    கூடுதல் வார்டுகள்...

    டிடிவி தினகரன் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். அங்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகே டிடிவி தினகரன் தீவிர அரசியலில் ஈடுபடாத நிலையில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டும் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தால் இன்னும் கூடுதலான வார்டுகளில் அமமுக வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+