740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது?
சென்னை: சென்னையில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டு இருக்கும் அம்மோனியம் நைட்ரேட் நாளை இடமாற்றம் செய்யப்படுகிறது.
Recommended Video
கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பாதிப்பு இன்னும் போகவில்லை. இதுவரை 137 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகி உள்ளனர். மொத்தமாக இதுவரை 3 ஆயிரம் பேர் வரை இந்த வெடிப்பில் காணாமல் போய் இருக்கிறார்கள்.
அந்த நகரமே மிக மோசமான அழிவை இதனால் சந்தித்து இருக்கிறது. இதுவரை காயம் அடைந்த 4000 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

பெய்ரூட் சம்பவம்
பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் இப்படி வெடித்தவுடன் எல்லோரின் கவனமும் சென்னை பக்கம் திரும்பியது. சென்னையில் இருக்கும் மணலியில் உள்ள கிடங்கில் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2015 செப்டம்பரில் 27ம் தேதியில் இருந்து சென்னையில் இந்த அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை எப்படி
மொத்தம் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 5 வருடமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் இங்கேயே இருப்பது ஆபத்தானது என்று அறிவியலாளர்கள் கூறினார்கள். காலம் செல்ல செல்ல இந்த அம்மோனியம் நைட்ரேட் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உறுதி அளிக்கப்பட்டது
இந்த நிலையில் உடனடியாக இந்த அம்மோனியம் நைட்ரேட் இணையம் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது. சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களாக பாதுகாப்பான இடத்தில் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதால் பிரச்சனை இல்லை. நீண்ட நாட்களுக்கு அம்மோனியம் நைட்ரேட் இங்கே இருக்காது. உடனே இதை விற்பனை செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.

உடனே விற்பனை
இந்த நிலையில் தற்போது சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத் கொண்டு செல்லப்படவுள்ளன. ஹைதராபாத் நிறுவனம் ஒன்று இந்த அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கிய நிலையில் தற்போது அந்த அம்மோனியம் நைட்ரேட் இடமாற்றம் செய்யப்படுகிறது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications