தேர்தலுக்கு பின் வெளியான தகவல்.. மாஸ் காட்டும் எடப்பாடி... ஸ்டாலினின் கொளத்தூர் தான் கடைசி... எதில்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்கள் தொகுதிகளில் எடப்பாடியில் அதிக வாக்குகளும், சென்னை கொளத்தூரில் குறைந்த வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியது. அதிமுக, திமுக தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன.

கூட்டணி கணக்கு
அதிமுக மற்றும் திமுக கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டன. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல தேமுதிக, மஜ்லிஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிட்டது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் களமிறங்கியது.

முதல்வர் வேட்பாளர்கள்
அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளரானார். அதேபோல கமல், டிடிவி தினகரன், சீமான் ஆகியோரும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு எவ்வளவு
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் 72.78% வாக்குகள் பதிவானதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

எடப்பாடியில் அதிகம்
முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலேயே அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிடும் சேலம் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியிருந்தன. அதைத்தொடர்ந்து அமமுக முதல்வர் வேட்பாளரான டி டி வி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் 67.43% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொளத்தூரில் ரொம்ப குறைவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 60.52% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாகக் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். அங்கு 60.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் போட்டியிட்டும் போடிநாயக்கனூரில் 73.65% வாக்குகள் பதிவாகியிருந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications