அமுல் பால் விலை அதிரடியாக உயர்வு.. நாளை முதல் அமலுக்கு வருகிறது! எவ்வளவு கூடியுள்ளது?
சென்னை: பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போர் சூழல் காரணமாக உணவு பொருள் உயரும் நிலையில், பால் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குஜராத் மாநில கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் அமுல். பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் விலை ரூ.2 உயர்வு
ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், செலவுகள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு இருப்பது அமுல் பால் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் விலை உயர்வு தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் முக்கியமான பால் பாக்கெட் வகைகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளோம். இந்த புதிய விலை மே 14 முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வுக்கான காரணம்
கால்நடை தீவனங்களின் விலை உயர்வு மற்றும் பால் பாக்கெட்டுகளுக்கான பேக்கேஜிங் பொருட்களின் செலவு அதிகரித்ததே இந்த புதிய விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பால் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து செலவு, உற்பத்தி செலவு உள்ளிட்ட செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ள சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பால் விலையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமுல் கோல்ட்
அமுல் தாசா
அமுல் கவ் மில்க்
அமுல் பஃபலோ மில்க்
அமுல் ஸ்லிம் & டிரிம்
அமுல் ஸ்டாண்டர்ட் மில்க்
அமுல் டி-ஸ்பெஷல்
ஆகிய அமுல் பால் பிராண்ட்களுக்கு விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு:
* அமுல் கோல்ட் பால் லிட்டருக்கு ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆக உயர்கிறது
* அமுல் பஃபலோ மில்க் ரூ.74-ல் இருந்து ரூ.76 ஆக அதிகரிக்கிறது
* அமுல் கவ் மில்க் ரூ.58-ல் இருந்து ரூ.60 ஆக உயர்கிறது
* அமுல் ஸ்லிம் & டிரிம் பால் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயர்கிறது
மற்ற பால் வகைகளின் சில்லறை விலைகளும் இதேபோல் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications