ஜீ தமிழை கலக்கிய “குட்டி பெரியார்”.. பிக்பாஸிலும் “செம மாஸ்” -ஸ்டாலின் பாராட்டியது அமுதவாணன் மகனையா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து வரும் நிலையில், நேற்று அமுதவானனின் மகன் தந்தை பெரியார் போன்றே நடித்துக் காட்டி அவரது சுயமரியாதை கருத்துக்களை தெரிவித்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதவானன் மகன் இவ்வாறு பேசியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டியது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை நடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 பிக்பாஸ் நிகழ்ச்சிகள்ஃஐ கடந்து இம்முறை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதேபோல் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த 24 மணி நேர நேரலையில் பல உண்மைகள், போட்டியாளர்கள் ரகசியமாக பேசிக்கொள்ளும் விசயங்கள் என அனைத்து தெரிய வருகின்றனர்.

24 மணி நேர லைவ்
அதேபோல் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில் நேரம் கருதி வெட்டப்படும் காட்சிகளை 24 மணி நேர லைவில் மக்கள் பார்க்கிறார்கள். அந்த வகையில் தற்போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவராலும் விரும்பப்படும் ஃப்ரீஜ் டாஸ்க் தொடங்கி உள்ளது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குள் வருகிறார்கள்.

ப்ரீஸ் டாஸ்க்
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் மைனா, ஷிவின், அமுதவாணன் ஆகியோரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இதில் அமுதவாணின் மனைவி, மூன்று மகன்கள் வருகை தந்தார்கள். இவர்களில் அமுதவாணன் மகன் போட்டியாளர்கள் விக்ரமன், ஷிவின், அசீம், கதிரவன் ஆகியோரை போன்றே நடித்துக் காட்டினார்.

பெரியார்போல் நடிப்பு
அப்போது விக்ரமன் மற்றும் அமுதவாணன், அவரிடம் பெரியார் போல் நடித்துக் காட்டுமாறு கூறினார். உடனே அந்த சிறுவன், "பெண்களுக்கு கல்யாணம், புருசனை தாண்டி வாழ்கை என்ற ஒன்று உள்ளது. ஆணும் பெண்ணும் சமம். நான் ஏன் இந்த ஜாதி, மதத்தை எதிர்க்கிறேன்? முக்கிய காரணமே.. ஜாதி, மத, கலாச்சாரம் எல்லாமே பெண்களை அடிமையாக்குகின்றன.

முற்போக்கு கருத்துக்கள்
பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் கருவியாக பார்க்காதீர்கள். பெண்களுக்கும் ஆசை, கனவு, லட்சியம் என்று எல்லாம் இருக்கிறது. பெண்களை வேறொருத்தரின் வீட்டுக்குள் பூட்டுவதை போன்ற அடிமைத்தனம் வேறு எதுவும் இல்லை. பெண் சமுதாயத்தில் மேலே வரணும். புடிச்ச துறையில சாதிக்கனும். இதுதான் இந்த கிழவனோடு ஆசை. நீ போய் அவளை படிக்க சொல்லு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றார்.

ஜீ தமிழ் நிகழ்ச்சி
அப்போது அமுதவாணன், முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக மகனை நேரில் அழைத்து பெரியார் போல் பேச வைத்து பாராட்டியதாக தெரிவித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்துகொண்ட அமுதவாணன் மகன், பெரியார் போன்றே வேடமணிந்து அவரது சாதி ஒழிப்பு மற்றும் பெண்ணடிமைத் தனத்துக்கு எதிரான கொள்கைகளை பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பாராடு
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. ஒருபக்கம் இதற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க மறுபக்கம் தமிழக மக்கள் குட்டி பெரியாராக நடித்த அமுதவாணன் மகனை பெரிதும் பாராட்டினர். இதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார். இவர் அமுதவாணனின் மகன் என்று மக்கள் பலருக்கு தெரியாத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அது தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications