Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கில படக் காப்பிதான் ‘குணா’? கமலுக்கு டூப் போட்ட ஜோசப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'குணா' திரைப்படமே ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தெரியவந்துள்ளது.

மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் பெரிய ஹிட் ஆனதா என்று தெரியவில்லை. ஆனால், அந்தப் படத்தைப் பார்க்கத் தமிழ் ரசிகர்கள்தான் படையெடுத்து வருகிறார்கள். அந்தளவுக்கு அது தமிழ் ரசிகர்களுடன் ஒன்றிப் போய் உள்ளது.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

அதற்கு கமல்ஹாசனின் 'குணா'தான் காரணம். அவரது படத்தில் இடம்பெற்ற கொடைக்கானல் குகைதான் இந்த மலையாளப் படத்தின் மைய கதைக் கரு.

இந்தப் படத்திற்காக அந்தக் குறிப்பிட்ட குகையைக் கமல் தேர்வு செய்வதற்குக் காரணமாக இருந்தவர் ஜோசப். இவர் தலைமுறை தலைமுறையாக இந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் சடத்தைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு முன் அந்த வேலையை இவரது அப்பா செய்து வந்தார். வழிவழியாக ஒரு பரம்பரை தொழில் போலப் பிணங்களைத் தூக்கிச் சுமந்து வருகிறது ஜோசப் குடும்பம்.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

அவர் 'குணா' படத்தின் போது கமல்ஹாசன் எப்படித் தன்னைத் தேடி வந்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அது பற்றி ஜோசப், "ஒரு நாள் இயக்குநர் சந்தான பாரதி, 'குகைக்குள் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும். அப்படியான இடம் எங்கே உள்ளது' என்று என்னைத் தேடி வந்து கேட்டார். நான் அவரை அழைத்துக் கொண்டு போய் காட்டினேன். அதைப் பார்த்ததும் இடம் அவருக்குப் பிடித்துவிட்டது.

உடனே, ஆட்களை வைத்து அங்குள்ள செடிகளை எல்லாம் அப்புறப்படுத்தச் சொன்னார்கள். அடுத்து ஒருவாரம் கழித்து வருவதாகச் சொன்னார்கள். நான் ஆட்களை வைத்துச் சுத்தப்படுத்திக் கொடுத்தேன். அதன்பின் அந்தக் குகைக்குள் வைத்து ஒரு பாட்டு சீன் எடுத்தார்கள்.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

இந்தப் படம் எடுப்பதற்கு முன்னால் அந்தக் குகை பக்கம் ஆடு மாடுகள் கூடப் போகாது. அந்தளவுக்குக் காடு போல் இருக்கும். நானும் அப்பாவும் சடலங்களை எடுக்கக் கீழே இறங்குவோம். அதன் மூலம் அந்தக் குகை எனக்கு அறிமுகமானது.

படத்தில் வரும் பாடல் காட்சியில் 'மனித காதல் அல்ல' என்று அவர் பாறையை விட்டுத் தாவவேண்டும். அதைச் செய்து பார்த்த கமல், கடைசியில் முடியாது என மறுத்துவிட்டார். அவர் யாரையாவது வைத்து டூப் போட சொல்லிவிட்டார். 'குணா' பாட்டு சீனுக்காக என்னைத்தான் டூப் போட்டார்கள். அவரைப் போலவே கோட் போட்டு, தாடி வைத்து என்ன டூப் போட்டார்கள்" என்கிறார் ஜோசப்.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து தனது திரையுலக அனுபவத்தைப் பற்றிப் பேசியுள்ள நடிகர் மற்றும் திரை விமர்சகர் சத்யேந்திரா 'குணா' படமே காப்பி என்று ஒரு போடு போட்டுள்ளார்.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

"Sweet Hostage இந்தப் படத்தோட காப்பி தான் 'குணா'. இந்தக் 'குணா'வைப் பார்த்துவிட்டுத் தான் அதன் பாதிப்பில் செல்வ ராகவன் 'காதல் கொண்டேன்' படம் எடுத்தார். இப்படிப் பல படங்கள் வந்தன.

Sweet Hostage இந்தப் படத்தில் அதிக கேரக்டர்கள் இருக்காது. ஒரு பெண் ஏதோ ஒரு கடையில் நின்றுகொண்டிருப்பார். அப்போது அங்கே ஒருவர் வண்டியில் வருவார். லிஃப்ட் கேட்பாள். அவனும் வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொள்வான். ஆனால், அவள் ஏறியபிறகு வண்டி நிற்காமல் போகும்.

ஒரு மலைப் பிரதேசத்திற்குப் போய் அங்குள்ள ஒரு சின்ன வீட்டில் அவளை அடைத்து வைத்துவிடுவான். அப்புறம்தான் இவன் பைத்தியம் என்பது அவளுக்குத் தெரியும்.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

அவளை அடைத்து வைத்து சாப்பாடு எல்லாம் கொடுப்பான். ஆனால் வெளியே விடமாட்டான். இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே 'குணா'வில் இருக்கும். அதைத் தழுவித்தான் எடுத்தார் கமல்.

Sweet Hostage படத்தில் ஒரு பக்கம் தன் மகளைக் காணவில்லை என்று பெற்றோர் தேடுவார்கள். கடைசியில் போலீஸ் வந்து அவனைச் சுட்டு, அந்தப் பெண்ணைக் காப்பாற்றும். இதுதான் கதை. மிக அழகான படம்.

An adaptation of the English film Gunaa by Kamal Haasan

The BeasT Mus Die. இது ஒரு ஃபிரெஞ்ச் படம். இதைக் காப்பி அடித்துதான் மலையாளத்தில் எடுத்தார்கள். அதுதான் தமிழில் வந்த 'பாபநாசம்'. இந்த ஃபிரெஞ்ச் படம் பார்த்துதான் ஜப்பானில் அப்படியே தழுவி எடுத்தார்கள். அதை அந்த ஜப்பானிய இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலுமகேந்திரா எடுத்த மூன்றாம் பிறை கூட காப்பிதான். La Stada என்ற படத்தைப் பார்த்து அவர் காப்பி அடித்தார்" என்கிறார்

An adaptation of the English film Gunaa by Kamal Haasan
An adaptation of the English film Gunaa by Kamal Haasan
An adaptation of the English film Gunaa by Kamal Haasan
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+