அச்சு அசலா சின்ன வயசு ரஜினி மாதிரியே இருக்காரே.. மிரளும் ரசிகர்கள்.. யாருப்பா இவரு?
சென்னை: அச்சு அசலா சின்ன வயசு ரஜினி மாதிரியே இருக்காரே..மிரளும் ரசிகர்கள்.. யாருப்பா இவரு என்று கேட்கும் அளவிற்கு ஏஐ டெக்னாலஜியில் சித்து விளையாட்டு விளையாடி உள்ளார்கள் நம்மூர் சாப்ட்வேர் என்ஜினியர்கள்.. தளபதி படத்தின் லேட்டஸ்ட் வெர்சனை பார்ப்பது போல் இருப்பதால் யாருமே இதனை ஏஐ என்று நம்ப மறுக்கிறார்கள்.
அண்மையில் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா 'நூ காவலயா' என்று கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் பலரையும் ஈர்த்திருக்கும்.. தமன்னா ஆடியது ரியல் என்றால், தமன்னாவை போல் காஜல் அகர்வால், சிம்ரன் என பல நடிகைகள் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் வெளிவந்தன. இதெல்லாம் உண்மையாகவே காஜல் அகவர்வால் சிம்ரன் ஆகியோர் ஆடியது போல் தான் இருந்தது. ஆனால் சாப்ட்வேர் என்ஜினியர்கள் சொன்ன பின்னரே அது ஏஐ வீடியோ என்று தெரியவந்தது.

இன்றைக்கு உள்ள ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரை அப்படியே அச்சு அசலாக உருவாக்க முடியும் என்கிற நிலை இருப்பதால் இது பலரையும் வியக்க வைத்துள்ளது. அண்மையில் அந்த காலத்தில் இருந்த பல நடிகர்கள் இன்றைக்கு இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.. சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன், எம்ஆர் ராதா, ஜெமினி கணேசன் என பலரையும் ஏஐ இல் உருவாக்கி இருந்தார்கள். அந்த படங்கள் எல்லாம் பலருக்கும் ஆச்சர்யத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்று டுவிட்டரில் உலா வருகிறது. அதில் நடிகர் ரஜினி காந்த் சிறுவயதில் இருப்பது போன்ற தோன்றத்தில் ஒருவர் இருக்கிறார். மேலும் அதில் சில்க் போன்ற தோற்றம் உடைய ஒரு நடிகையும் இருக்கிறார். இருவரும் தளபதி படத்தில் வரும் சுந்திரி கண்ணால் வரும் சேதி என்ற பாடலுக்கு ரொமான்ஸ் செய்வது போல் இருந்தது. இதை பார்த்த பலர், என்னப்பா இது , சின்ன வயசுல ரஜினியை பார்த்த மாதிரியே இருக்கு.. ரஜினிக்கு இந்த பையனை வைத்து பல படங்களுக்கு டூப் போடலாமே என்றார்கள்.
நம்ம ரஜினியை அப்படியே உறிஞ்சு வச்சிருக்காரே என்றுஆச்சர்யத்துடன் வீடியோவை பார்த்தவர்கள் அது ஏஐ வீடியோ என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். அது எப்படிஇவ்வளவு அச்சு அசலாக ரஜினியை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் அந்த வீடியோவை யார் பார்த்தாலும் ஏஐ வீடியோ என்று சொன்னால் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.ரஜினி அல்ல அது ஏஐ என்பதை நம்ப கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.
https://twitter.com/i/status/1709836061067894903இந்த ரஜினி வீடியோ மட்டுமல்ல வரும் காலத்தில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வீடியோவில் காட்ட முடியும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதே சரியாக இருக்கும்.யாரை பற்றி எப்படி வேண்டுமானாலும் வரும் காலத்தில் வீடியோ வர வாய்ப்பு உள்ளதால் ஏஐ வரமாக போகிறதா, அல்லது சாபமாக போகிறதா என்பது தெரியும். ஏஐ மூலம் வீடியோவை மட்டுமல்ல குரலையும் அப்படியே கொண்டுவர முடியும் என்பதால் இல்லாத ஒன்றை இருப்பதாக கூட காட்ட முடியும். எனவே நீங்கள் என்ன வீடியோவில் பார்த்தாலும் உடனே நம்பிவிடாதீர்கள்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications